Wednesday 18 April 2012

சினிமா விமர்சனம், ஓகே ஓகே


ஒரு கல் - ஒரு கண்ணாடி-

சினிமா விமர்சனம், 

oru_kal_oru_kannadi_vimarsanam
                                   
                              ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் எம். ராஜேஷ் கைவண்ணத்தில் வெளி வந்திருக்கும் படம். எஸ் எம் எஸ் ( ஷிவா மனசுல சக்தி ) . பாஸ் என்கிற பாஸ்கரன் என இரண்டு சூப்பர் ஹிட்களை தந்திருக்கும் ராஜேஷ் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹாட் ரிக் அடித்திருக்கிறாரா ?
ஓகே ஓகே கதை
காதலிக்கும் இளைஞன். அவனைக் கவர்ந்த பெண். இளைஞனுடன் ஒரு நண்பன். அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், கலாட்டாக்கள். வழக்கமான எம்.ராஜேஷ் கதை. அதை தன் அக்மார்க் காமெடி முத்திரையோடு அதி வேக திரைக்கதையோடு கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
நடிப்பு :
உதயநிதி ஸ்டாலின் முதல் பட திணறல் பரவலாக இருந்தாலும் அந்த அம்மாஞ்சி ஜொள்ஸ் இளைஞன் ரோலில் பொருந்தி விடுவதால் விமர்சனங்களிலிருந்து தப்பித்து விடுகிறார்.
ஹன்சிகா மோத்வானி ஜில் ஜில் கூல் கூல் பெண்ணாய் ஓகே ஓகே வில் வலம் வருகிறார். பாடல் காட்சிகளில் கொஞ்சம் எக்ஸ்ட் ரா சூடு. இந்த முறை கொஞ்சம் காமெடியும் ட்ரை பண்ணியிருக்கிறார்.

சந்தானம் ஓகே ஓகே படத்தின் நாடித்துடிப்பாய் இருக்கிறார். காட்சிக்கு காட்சி கலகலக்க வைக்கிறார். அதிலும் அவர் உதயநிதி நட்பு பற்றி சிலாகிக்கும் காட்சிகளில் தியேட்டரில் ரகளை கட்டுகிறது. வஞ்சிரம் மீனு வவ்வாலு பாட்டில் ஒரு குத்தாட்டமும் போட்டிருக்கிறார்.
சரண்யா உதயநிதியின் அம்மாவாய் வந்து கலகலப்பூட்டுகிறார். ஆனால் சரண்யா தொடர்ந்து ஒரே ரோல் வலையில் விழுந்து விடுவாரோ என பயமாய் இருக்கிறது.
தவிர எம்.ராஜேஷுக்கே உரிய ஸ்டைலில் ஒரு கௌரவ ரோல் பட்டாளம் பட்டையை கிளப்புகிறது.
 இசை.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை படத்திற்கு பக்க பலம். அகிலா அகிலா, வஞ்சிரம் மூனு வவ்வாலு பாடல்கள் ஏற்கனவே டாப் டென் பாடல்களாச்சே !
எடிட்டிங்:
விவேக் ஹர்சனின் நறுக் சுருக் எடிட்டிங்க் ஓகே ஓகேவிற்கு அந்த ஜெட் வேகத்தை தந்திருக்கிறது ! பாராட்டுக்கள் !
ஒளிப்பதிவு :
பாலசுப்ரமணியம் கேமராவில் சாதா காட்சிகளில் அடக்கி வாசித்து பாடல் காட்சிகளில் சீறிப் பாய்கிறார்.
இயக்கம் :
எம்.ராஜேஷுக்கு தன் படங்களில் ஒரு சிம்பிள் ஃபார்முலா இருக்கிறது. ஒரு பையன் ஒரு பொண்ணு. ஒரு முட்டி மோதும் லவ். கூடவே ஒரு நண்பன். கலாய்ப்பு. கௌரவ ரோல் என்ட்ரி என ஹோட்டல் மெனு போல அவர் படங்களில் ஆர்டர் செய்து கிடைக்கும் ஐட்டங்கள் நிறைய. இதை எல்லாம் புத்திசாலித்தனமாக மிக்ஸ் பண்ணி காமெடி கலந்து சரியான இடத்தில் பாடல்களை நுழைத்து தூள் பண்ணி விடுகிறார். அதே ஃபார்முலா தான் இதுவும் ! ஹாட் ரிக் அடித்திருக்கிறார் எம்.ராஜேஷ்!
பார்க்கலாமா ? :ஓகே ஓகே ஒரு ஜெட்வேக சூப்பர் டூப்பர் காமெடி ப்ளஸ் காதல் படம் !நண்பர்களுடன் சேர்ந்து பல முறை பார்க்கலாம் !
ஃபைனல் வெர்டிக்ட் : எஸ்.எம்.எஸ் சுக்கே பாஸு இந்த ஓகே ஓகே – டபுள் ஓகே !

No comments: