Monday 20 August 2012

தொழில்


கேன் வாட்டர் தொழில் ஒரு பார்வை

சந்தை வாய்ப்பு!

நகர்ப்புறங்களில் கேன் வாட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இதைத்தான் பயன்படுத்து கிறார்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகள், திருமணங்கள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் போன்ற வற்றிலும் கேன் வாட்டர்தான் பயன்படுத்தப் படுகிறது. இதனால் அதிகமான சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளது.  
 

முதலீடு!

இந்தத் தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் தேவை. பத்து லட்சம் முதல் முப்பது லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டிலும் இந்த தொழிலை தொடங்கி நடத்தலாம்.

மூலப் பொருட்கள்!

தண்ணீர்தான் முக்கிய மூலப் பொருள். தண்ணீரை சுத்தம் செய்ய சில வகையான கெமிக்கல்கள் தேவை.




தயாரிப்பு!

கேன் வாட்டர் தயாரிப்பில் மொத்தம் ஏழு நிலைகள் உண்டு. முதல் நிலை, தண்ணீர் சேகரிக்கும் தொட்டியில், அதாவது சம்ப்’பில் (Sump) தண்ணீரை நிரப்புவது. சம்பில் தண்ணீரை நிரப்பிய பிறகு சாண்ட் ஃபில்டர் (Sand Filter) என்ற இயந்திரத்திற்கு அனுப்புவது இரண்டாம் நிலை. இந்த இயந்திரம் கூழாங்கல், குறுமண் ஆகியவற்றால் நிரப்பப் பட்டிருக்கும். இங்குதான் தண்ணீர் சுத்திகரிப்பு நடக்கும். தண்ணீரில் உள்ள தூசி, அழுக்கு போன்றவற்றை இந்த இயந்திரம் நீக்கிவிடும். மூன்றாவது நிலையில், ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) என்ற இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இந்த இயந்திரம் நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும். இங்கு அழுத்தம் கொடுப்பதனால் தண்ணீரில் உள்ள தூசி மற்றும் அழுக்குகள் நீக்கப்படும். இதனால் தண்ணீரின் கடினத்தன்மையும் குறையும்.

நான்காம் நிலையில், மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) என்னும் முறையின் மூலம் தண்ணீரில் இருக்கும் நுண்கிருமிகள் நீக்கப்படும். அடுத்து ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இங்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் தண்ணீரில் உள்ள அளவுக்கதிகமான உப்பு, கால்சியம், இரும்பு போன்றவை தனியாகப் பிரிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தின் குழாய் இரண்டாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஒரு குழாயில் நல்ல தண்ணீரும், மற்ற குழாயில் தேவையற்ற தண்ணீரும் வெளியே வந்துவிடும். நல்ல தண்ணீர் ஸ்டோரேஜ்’ டேங்குக்கு அனுப்பப்படும். இது ஐந்தாவது நிலை.

இந்த டேங்கில் உள்ள தண்ணீர் ஒஸநேட்டர்’ என்ற இயந்திரம் மூலம் ஸ்டெர்லைஸ் செய்யப்படுவது ஆறாம் நிலை. அடுத்து அல்ட்ராவயலெட் பல்ப் (UV Bulb) என்ற இயந்திரத்திற்கு அனுப்பப்படுகிறது. புற ஊதாக் கதிர்களால் தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் அழிக்கப்படும். இதுதான் ஏழாவது நிலை. இதன்பின் இறுதியாக, சுத்தமான தண்ணீர் ஃபில்லிங்’ இயந்திரத்திற்கு அனுப்பப்பட்டு கேன்களில் அடைக்கப் படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பாட்டில் அல்லது கேன்களில் நிரப்ப ஒரு பகுதி தனியாக இருக்க வேண்டும். அந்த அறை கண்டிப்பாக ஏசி வசதி கொண்டதாக இருக்க வேண்டும். இப்படி தயாராகும் தண்ணீரை நேராக மார்க்கெட்டிங் செய்ய கொண்டு சென்றுவிடலாம்.

கட்டடம்!

இத்தொழில் செய்ய குறைந்தபட்சம் 2,000 சதுர அடி இடம் கொண்ட கட்டடம் தேவைப்படும். கட்டடத்தில் பலவிதமான பணிகள் செய்ய தனித்தனியே அறைகள் அமைக்கப்பட வேண்டும். தண்ணீர் நிரப்ப ஒரு அறையும், அதன் சுத்தத்தன்மையை ஆராய ஒரு பரிசோதனைக் கூடமும், ஆரோ பிளான்டில் சுத்தம் செய்ய ஒரு அறையும் தேவைப்படும்.

மின்சாரம்!

21-30 ஹெச்.பி. மின்சாரம் வரை தேவைப்படுகிறது.

இயந்திரங்கள்! 

மண்ணை சுத்தப்படுத்தும் இயந்திரம் - சாண்ட் ஃபில்டர், ஆக்டிக் கார்பன் ஃபில்டர், மைக்ரான் ஃபில்டர், ஆர்.ஓ.யூனிட், தண்ணீர் சேகரித்து வைக்கும் டேங்க், ஒஸநேட்டர், புறஊதாக் கதிர்கள் சிஸ்டம் ஆகியவை தேவைப்படும். இந்த இயந்திரங்கள் அனைத்துமே ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தண்ணீரின் சுத்தத்தை ஆய்வு செய்ய ஆய்வகத்தில் இன்குபேட்டர், வாட்டர் பாத், மைக்ரோஸ் கோப் போன்றவைகள் தேவைப்படும்.

வேலையாட்கள்!

இத்தொழிலுக்கு குறைந்த பட்சம் எட்டு பேர் முதல் பதினெட்டு பேர் வரை தேவை. மேலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு செய்ய மைக்ரோ லேப்-பில் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி படித்த ஒருவரும், கெமிக்கல் லேப்-பில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்த ஒருவரும் தேவை.

பிளஸ்!

மற்ற தொழிலில் மூலப் பொருளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், தண்ணீர் ஏறக்குறைய எந்த செலவும் இல்லாமல் கிடைத்துக் கொண்டே இருப்பது இந்தத் தொழிலில் உள்ள மிகப் பெரிய பிளஸ்.

மைனஸ்!

12,000 லிட்டர் தண்ணீரை சுத்திகரித்தால் 6,000 லிட்டர் மட்டுமே இறுதியில் சுத்தமாக்கி பயன்படுத்த முடியும் என்பதால் செலவு அதிகமாக இருக்கும். போட்டியாளர்கள் அதிகமானவர்கள் இதில் இருப்பது இன்னொரு பெரிய மைனஸ்.

லேப் பணிகள்!

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் டி.டி.எஸ். டெஸ்ட்டும், ஓடர் டெஸ்ட்டும் (ODOUR TEST) செய்யப்படும். மேலும், கெமிக்கல் ஆய்வகத்தில் பி.ஹெச். லெவல் டெஸ்ட் செய்வது அவசியம்.

கட்டுப்பாடுகள்!

சட்டப்படி இங்கு வேலை செய்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. தண்ணீரை நிரப்பும் பகுதியில் வேலை செய்யும் பெண்கள் கண்டிப்பாக பூ, பொட்டு, வளையல் போன்றவை அணியக்கூடாது. கண்டிப்பாக அவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் தேவை. தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கையில் உறை, வாயில் முகமூடியும் (விகிஷிரி) அணிந்து கொள்ள வேண்டும். இருபது லிட்டர் கேன்களை மறுபடி உபயோகப்படுத்தும் போது சோப் ஆயில், குளோரின், சுடு தண்ணீர் போன்றவற்றால் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். * ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற வருடம் 97,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். * தண்ணீர் நிரப்பப்பட்ட 20 லிட்டர் கேன் ஒன்றின் விலை 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கேனுக்கு 3 முதல் 5 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. * தண்ணீர் பேக் (றிகிசிரி) செய்யும் அளவுகள்: 300 மில்லி, 500 மில்லி, 1 ,2, 5, 20 லிட்டர். * மழை நீரை நேரடியாக சுத்திகரிக்கக் கூடாது. இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட்டு வரும் தொழில். அதிகரித்து வரும் சந்தையும் சாதகமாக இருப்பதால் துணிந்து இத்தொழிலில் இறங்கலாம்.

27 நட்சத்திரங்களுடைய பொதுவான பலன்கள்


27 நட்சத்திரங்களுடைய பொதுவான பலன்கள்

1.அசுவினி
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல புத்திசாலியாகவும், பலராலும், விரும்பிநேசிக்கப்பட்டவராகவும், செல்வந்தராகவும், நன்கு வளர்க்கப்பட்டவராகவும் விளங்குவீர்கள். அத்துடன்பிறருக்கு மரியாதை காட்டும் பண்பாடும் உண்மைபேசும் குணமும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதானசுபாவமும் உங்களிடம் காணப்படும். நீங்கள் உங்கள் தொழிலில், பயிற்சி பெற்றவராக விளங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், நீங்கள் நல்ல உறவுகளைப் பராமரித்து வருவீர்கள். நீங்கள் நல்லஉடையுடுத்திடுவதிலும் ஆபரணங்களிலும் ஆசை கொண்டவர். உங்களுக்கு பருமனான உடல்கட்டிருந்தாலும், பலவீனமான கல்லீரல் இருக்கும். உங்களுடைய 20 - வது வயதிலிருந்து, நீங்கள் நல்லஅதிருஷ்டசாலியாக இருப்பீர்கள். குந்த் முல நகூஷத்திரத்தில் நீங்கள் பிறந்திருப்பதால், பூஜைகளைச்செய்திடவேண்டும்.
2.பரணி
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், உங்களைப் பற்றிய அபாண்டமான வதந்திகளுக்கு, நீங்கள்இலக்காவீர்கள். உபயோகமற்ற முயற்சிகளில், நீங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். அன்றாடப் பணிகளில், நீங்கள் ஒழுங்காகச் செயல்படமாட்டீர்கள் வழக்கத்துக்கு விரோதமான செயல்களில் நீங்கள் நாட்டம்காட்டுவீர்கள்.
3.கார்த்திகை
இந்த நகூஷத்திரத்தில் நீங்கள் பிறந்தவராதலால், நீங்கள் கஞ்சத்தனமாகவும், நன்றிகெட்டவராகவும், எப்போதுமே பதட்டம் மிகுந்த, மனக் கவலையுடையவராகவும் இருப்பீர்கள். உங்கள் பண நிலைமை, சிறப்பாக இராது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு நல்லுறவு நிலவாது. உணவு மற்றும்லவங்க சாமான்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு பளிச்சென்ற நல்ல தோற்றமிருக்கும்நீங்கள் பரவலாகப் புகழ்பெற்று விளங்குவீர்கள். யாருமே, உங்களை நம்ப முடியாது நியாயமற்ற வழிகளில்நீங்கள் பணம் சம்பாதிப்பீர்கள். ஆனால். உங்களுக்கு ஒதுக்கப்படும் வேலைகளை முடித்துக் கொடுக்கும்திறமை, உங்களுக்கு இருக்கிறது.
4.ரோகிணி
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் மதத்தில் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு விவசாயம் முலமாகத்தான், முக்கியமாக வருமானம் கிடைக்கும். நீங்கள், நல்ல அழகியதோற்றமுடையவராகவும், புத்திசாலியாகவும், புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதில் மிகுந்தசாமர்த்தியசாலியாகவும் விளங்குவீர்கள்.
5.மிருகசீரிசம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், போரிலும், போர்சார்ந்த உத்திகளிலும், தந்திரங்களிலும்வெற்றி காண்பீர்கள். மற்றவர்களிடம் மரியாதையோடும் பண்போடும் பழகுவீர்கள் உணர்ச்சி வெறியுடையஉங்களுக்கு, அரசு உயர் அதிகாரிகள் நல்ல மதிப்பும் மரியாதையும் அளிப்பார்கள். நேர்த்தியானவற்றைநன்கு உணர்ந்து பாராட்டக்கூடிய நீங்கள் எப்போதுமே, சரியான பாதையைத்தான் தெரிந்தெடுப்பீர்கள்.
6.திருவாதிரை
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், உண்மைக்குப் புறம்பாக இருப்பதுடன், மிகவும்மோசமான கோப சுபாவம் கொண்டவராகவும் இருப்பீர்கள். ஆயினும்கூட, நீங்கள் அறிவுத் திறன்பெற்றபுத்திசாலியாக இருப்பீர்கள். பிறருக்கு கொடுமை விளைவித்து, அதில் மகிழ்ச்சிகாண முயலும் நீங்கள், பல சமயங்களில், நன்றிகெட்டவராகவும், வருங்காலத்தில் நல்ல நம்பிக்கை கொண்டதைரியசாலியாகவும் விளங்குவீர்கள். உங்கள் வாழ்க்கையில், சாதாரணமாக பல வசதிகளும்சுகபோகங்களும் இராது நீங்கள் கடினமான வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கலாம் நீங்கள் செலவாளியாகஇருப்பதுடன், துன்பங்கள் நேரிடும்போதும், மனம் கலங்காமல் இருப்பவர். உங்கள் உடல்வாகு, சீரானதாகஇராது 25 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் வெற்றி காண்பீர்கள்
7.புனர்பூசம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் பொறுமைசாலியாகவும், அமைதியானசுபாவமுடையவராகவும் இருப்பீர்கள் நல்ல குணத்துடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அன்புக்கும், பிரியத்துக்கும் பாத்திரமானவராக விளங்குவீர்கள். உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்நீங்கள் தாராள சிந்தையுடையவராக இருப்பீர்கள். குழந்தைகள் முலம் மன நிறைவு பெற்று, நல்லசெல்வந்தராக விளங்குவீர்கள். மதிப்பு வாய்ந்த ரத்தினக் கற்களில் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும்சொந்தத்தில் சொத்துக்களும் இருக்கும். நீங்கள் விரிவாக, பல இடங்களில் பயணம் செய்வீர்கள் 24 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.
8.பூசம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், உங்கள் விருப்பங்கள்மீது, உங்களுக்குக் கட்டுப்பாடுஇருக்கும் பொதுவாக பலரும் உங்களை விரும்பி நேசிப்பார்கள் சமய ஈடுபாடும், தாராள சிந்தையும், மற்றவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையும், உங்களிடம் காணப்படும். நீங்கள், நன்கு படித்தபுத்திசாலியாகவும், தெய்வ நம்பிக்கையுடன், உண்மையில் உறுதி கொண்டவராகவும் இருந்து, வசதியானவாழ்க்கை நடத்துவீர்கள். நீங்கள் மிகுந்த அதிருஷ்டசாலியாகவும், செல்வந்தராகவும், நல்ல உடல்கட்டுஅமைந்தவராகவும் விளங்குவீர்கள். 35 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம்காண்பீர்கள்.
9.ஆயில்யம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் பணக்காரராக இருப்பீர்கள் அதனால் உங்கள்குடும்பத்துக்கு, பெரிய அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள் ஆனால், நீங்கள் பணத்தை விரயம்செய்வீர்கள். உங்கள் தந்தை, தாய் அல்லது உங்கள் வயதுடைய மற்றவர்களுக்கு, நீங்கள் தீங்குவிளைவிப்பவராக மாறக்கூடும். நீங்கள், ஒரு குறிக்கோளே இல்லாமல், இங்குமங்கும் திரிபவர்பாவகாரியங்களைச் செய்பவர் நன்றிகெட்டவர் சுயநலவாதி. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன்உங்களுக்கு மோசமான உறவுகள் இருந்துவரும். சந்தேகத்துக்குரிய கள்ள நடவடிக்கைகளிலும், பயனற்றமுயற்சிகளிலும், நீங்கள், உங்கள் ஆற்றலை செலவிடுவதுடன், மற்றவர்களை ஏமாற்றமும் செய்வீர்கள். மதுபானம் அருந்துவதிலும் சாப்பாடு சாப்பிடுவதிலும் பேரவா கொண்ட உங்களுக்கு, பெரிய குடும்பம்இருக்கும். உங்களுக்கு பலவீனமான கல்லீரல் இருக்கும் 33 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில்முன்னேறுவீர்கள்.
10.மகம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல செல்வந்தராகவும், புத்திசாலியாகவும், பிறரிடம்கருணை காட்டி உதவி செய்பவராகவும் இருப்பீர்கள். நீங்கள் வியாபாரத்தில் வெற்றி காண்பதுடன், சுகபோகமான வாழ்க்கையொன்றும் நடத்துவீர்கள். உங்களுக்கு பல பணியாட்கள் இருப்பார்கள்மதகாரியங்களில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கும். உங்கள் மனைவியுடன் சுமுகமான உறவுகளைகொண்டிருப்பீர்கள். உங்கள் பெற்றோர்களிடம், கடமைப் பற்றுடன் நடந்து கொண்டாலும், எதிலும்கண்டிப்பாக இருக்கக்கூடிய, ஒரு கடும் சுபாவம், உங்களிடம் குடிகொண்டிருக்கும். உங்கள் எண்ணமும்செயலும், தெளிவானதாய், திட்டவட்டமானதாக அமைந்திருக்கும். உங்கள் கல்லீரல்பலவீனமடைந்ததாய் இருக்கும். குந்த் முல நகூஷத்திரத்தில் நீங்கள் பிறந்திருப்பதால், பூஜைகள்செய்யவேண்டும் 25 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.
11.பூரம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், மென்மையாக பேசும் குணம் உடையவராகவும், சமயப்பற்றும், துணிச்சலும், தாராள சிந்தையும், பகைவர்களை வெற்றி கொள்ளும் சாதுர்யமும், தந்திரபுத்தியும் கொண்டவராக இருப்பீர்கள். நீங்கள், காமவெறி உணர்ச்சியும், கர்வமும்கொண்டிருப்பீர்கள். நிதிநிலை, அவ்வளவு வசதியாக இராது 33 லிருந்து 38 வயது வரையான காலம், உங்களுக்கு அதிருஷ்டமானதாக இருக்கும்.
12.உத்திரம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள், கருணை உள்ளம் நிறைந்தவராகவும், பொறுமை மிக்கவராகவும், நல்ல பண்பாடான நடத்தை கொண்டவராகவும், பலராலும் விரும்பிநேசிக்கப்படுபவராகவும் விளங்குவீர்கள். நீங்கள், உங்கள் சொந்த சம்பாதிப்புடன், சுகபோகமாக வாழ்க்கைநடத்துவீர்கள். உங்கள் உடல் எடை அதிகரித்திடலாம் 28 லிருந்து 31 வயது வரையான காலத்தில், நீங்கள்வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.
13.அஸ்தம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், மிகுந்த விவேகியாகவும், தாராள மனம்கொண்டவராகவும், செல்வந்தராகவும், பலராலும் விரும்பி நேசிக்கப்படுபவராகவும் விளங்குவீர்கள். துறவிகளிடம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும். 30 லிருந்து 32 வயது வரையான காலத்தில் நீங்கள்முன்னேறுவீர்கள்.
14.சித்திரை
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், பல்வேறான வண்ணங்களிலான துணிகளிலும்உடைகளிலும், உங்களுக்குக் கொள்ளை ஆசை இருக்கும். மலர்களை, நீங்கள் மிகவும் விரும்புவீர்கள். போர், உத்திகள் பற்றிய பல விஷயங்கள், உங்களுக்குத் தெரிந்திருக்கும். படிப்பும், அறிவும், பணமும்படைத்தவரான நீங்கள், சத்திய வாதியாக விளங்குவீர்கள். உங்கள் மனைவியும் குழந்தைகளும், உங்களுக்கு மன மகிழ்ச்சி தருவார்கள். நல்ல வசதியான வாழ்க்கை நடத்தப்போகும் நீங்கள் கடினஉழைப்பாளியாகவும், துணிச்சல் மிக்கவராகவும், பொருள் ஆர்வம் கொண்டவராகவும் விளங்குவீர்கள். கட்டிடங்கள் கட்டுவது, வைத்தியம், ஜோதிடம் ஆகியவற்றில், உங்களுக்கு நல்ல அறிவாற்றல் இருக்கும். நீங்கள் சமயப்பற்றும், தெய்வ பக்தியும் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பணம் சம்பாதித்தாலும் பணம் சேர்த்துவைத்திட முடியாது. நீங்கள் பொதுவாக, பருமனாக இருப்பீர்கள். 30 லிருந்து 35 வயது வரையானகாலத்தில் உங்களுக்கு நல்ல அதிருஷ்டங்கள் கிடைக்கும்.
15.சுவாதி
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல அழகிய தோற்றத்துடனும், மகிழ்ச்சியானசுபாவத்துடனும், விளங்குவீர்கள் உங்களுக்கு சமயப்பற்று இருக்கும் தர்ம காரியங்களுக்காக நன்கொடைஅளிப்பீர்கள். நீங்கள், உங்கள் உணர்ச்சிவெறிகளை கட்டுப்படுத்தி வைத்திடும் ஆற்றல் பெறுவீர்கள்ஆனால் விரகதாபத்தைப் (உணர்ச்சி வேட்கையை) பொறுத்துக்கொள்ள, உங்களால் இயலாது. வியாபாரத்தில் தேர்ச்சி பெற்றவராக விளங்குவதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும்நல்லுறவுகளைப் பராமரிப்பீர்கள். 30 லிருந்து 35 வயது வரையான காலத்தில், நீங்கள் வாழ்க்கையில்முன்னேறுவீர்கள்.
16.விசாகம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், சமயப் பற்றும், தெய்வ பக்தியும் கொண்டவராகஇருப்பீர்கள் ஆனால் பொறாமையும், நட்பில்லாத பகைமை உணர்வும் உங்களிடம் காணப்படும். உங்கள்உடல்நிலை, ஒன்று, மிக ஆரோக்கியமானதாக இருக்கலாம் அல்லது மிக மோசமானதாய் இருக்கும். 21, 28 மற்றும் 34 ஆம் வயதை எட்டும்போது, நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
17.அனுஷம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல செல்வந்தராகவும், பெரும்பாலும் அயல் நாட்டில்வசிக்கக் கூடியவராகவும் இருப்பீர்கள். உங்களால் பசியைப் பொறுத்துக் கொள்ள இயலாது பயணம்செய்வதில் உங்களுக்கு நல்ல விருப்பமிருக்கும். நீங்கள் நன்கு படித்துத் தேர்ச்சி பெற்றவராகவும், பணம்ஈட்டுவதில் படுசாமர்த்தியசாலியாகவும் இருப்பதுடன், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும், உதவியும்செய்வீர்கள். 39 வது வயதில்தான், உங்கள் வாழ்க்கையின் அதிருஷ்டவசமான காலகட்டம் துவங்குகிறது.
18.கேட்டை
பொதுவாக கேட்டை நட்சத்திரக்காரர்கள் இளகிய மனதும், நன்றாகப் பழகும் குணமும் உடையவர்களாகஇருப்பதால் அடுத்தவர்களின் மனக்கோட்டையையும் இவர்கள் ஆள்வார்கள். எதையும் ஆட்சி செய்யும்தன்மையைப் பெற்றிருந்தாலும், கொடுங்கோல் ஆட்சி செய்ய இவர்கள் விரும்பமாட்டார்கள். உபசரிக்கும்குணம், சரித்துப் பேசும் குணம் இவர்களுக்கு இருப்பதால் எப்போதும் அவர்களைச் சுற்று ஒரு நட்பு வட்டம்இருந்து கொண்டே இருக்கும். எனவே, கேட்டை நட்சத்திரம் கோட்டையை ஆள்வது உறுதி. அதில்சந்தேகம் இல்லை. ஆனால் அந்த ஜாதகருக்கு புதன் நீச்சம் பெறாமல், பகை வீட்டில் அமராமல், பகைக்கோளுடன் சேராமல், 6/8க்கு உரியவனுடன் சேராமல், நல்ல ஆதிபத்யம் பெற்ற கிரகங்களுடன்சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் நிச்சயம் கோட்டையைப் பிடிப்பார்/ஆள்வார்.
19.மூலம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் பணக்காரராகவும், மகிழ்ச்சி நிறைந்தவராகவும்இருப்பீர்கள். நீங்கள், மற்றவர்களுக்கு தீங்கு விளைவித்திடமாட்டீர்கள் மிகவும் உறுதியானகருத்துக்களைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள், தாராள சிந்தை கொண்டிருப்பீர்கள். பிறரால் விரும்பிநேசிக்கப்படுவீர்கள் நண்பர்களும் உறவினர்களும், உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் தருவார்கள். டாம்பீகமான சொகுசு வாழ்க்கையை நீங்கள் வாழ்வதுடன், பதட்டப்படாத அமைதியான சுபாவம்ஒன்றையும் கொண்டிருப்பீர்கள். உங்கள் வயதை ஒத்தவர்கள் அல்லது உங்கள் தந்தை, சகோதரர்போன்றவர்களுக்கு, நீங்கள் கேடு விளைவித்திடலாம். உங்களுக்கு கல்லீரல் கோளாறு ஏற்படும். உங்கள்வாழ்க்கையின் 27 அல்லது 31 வது வயதில், நீங்கள் செழிப்பைக் காண்பீர்கள்.
20.பூராடம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், நீங்கள், புத்திசாலியாகவும், கர்வமுடையவராகவும், மற்றவர்களுக்கு உதவியளித்து, நண்பர்களிடம் மிகுந்த ஒட்டுதலாகவும் இருப்பீர்கள். உங்கள்விருப்பத்துக்கு இசைவான மனைவியும் உங்களுக்கு கிடைப்பாள் நீங்கள் உறுதியான கருத்துக்களைக்கொண்டிருப்பீர்கள். குழந்தைகள் மற்றும் நண்பர்கள் முலம் உங்களுக்கு மன மகிழ்ச்சி கிட்டும். உங்கள் 28 வது வயதில், அதிருஷ்டவசமான காலம் ஆரம்பமாகும்.
21.உத்திராடம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், கடமைப்பற்றுடன் கீழ்ப்படிந்தும், நல்ல குணம்படைத்தவராகவும், பல நண்பர்களைக் கொண்டவராகவும் விளங்குவீர்கள். நீங்கள்நன்றியுடையவராகவும், அன்புள்ளம் நிறைந்தவராகவும் இருப்பதுடன், உங்களுக்கு கிடைத்த உதவிக்குநன்றிக் கடனும் செலுத்துவீர்கள். நீங்கள், மிகுந்த தந்திர புத்தியுடைய சாமர்த்தியசாலியாகவும், முயற்சியில் வெற்றி காண்பவராகவும் விளங்குவீர்கள். உங்களுக்கு பல செல்வந்தர்களைத்தெரிந்திருக்கும் உங்கள் முதலாளிகள் உங்களை மதித்து மதிப்புக் கொடுப்பார்கள். இசையிலும்நடனத்திலும் உங்களுக்கு அபார ஆசை இருக்கும். உங்கள் 31 வது வயதுக்குப் பின், மிகுந்தஅதிருஷ்டசாலியாக இருப்பீர்கள்.
22.திருவோணம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நல்ல சுபிட்சத்தோடும், படித்தவராகவும், புத்திசாலியாகவும் விளங்குவீர்கள். இசை, ஜோதிடம், கணிதம் - ஆகியவற்றில் உங்கள் மிகுந்த ஆர்வம்இருக்கும். உங்கள், அதீதமான, நல்ல சக்திவாய்ந்த உள்ளுணர்வு ஒன்று இருக்கும். உங்களுக்குகவர்ச்சிமிக்க, தாராள மனம் படைத்த மனைவி/கணவன் கிடைப்பார். உங்கள் வாழ்க்கையில், 9 வதுமற்றும் 24 வது வயதில், நல்ல அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
23.அவிட்டம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால் இசையில் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருப்பீர்கள். தாராளசிந்தையும், செல்வவளமும், நல்ல தீர உணர்வும் கொண்டவராக நீங்கள் விளங்குவீர்கள். பிறர் உங்களைமதித்து மரியாதை, தருவார்கள் உங்கள் கணவன்/மனைவி உங்களை மிகவும் விரும்பி நேசிப்பார். நீங்கள்தைரியமானவராக இருப்பீர்கள் உங்கள் சகோதரர்கள் மற்றும் உறவினர்களை, நீங்கள் மிகவும் விரும்பிஅன்பு காட்டுவீர்கள். உங்களின் 15 வது, 23 வது மற்றும் 29 வது வயதுகளில்தான், மிக அதிருஷ்டமானகாலத்தைப் பார்க்க முடியும்.
24.சதயம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், தர்மசிந்தை உடையவராகவும், செல்வவளமும், தாராள மனமும், சுயேச்சையான கருத்தும், புத்திசாலித்தனமும், அறிவாற்றலும் நிறைந்தவராகவும்விளங்குவீர்கள். உங்கள் பகைவர்களை ஒடுக்கி வெற்றி காண்பீர்கள். உங்களைப் பலரும், மதித்துமரியாதை காட்டுவார்கள் உங்களுக்கு நல்ல அந்தஸ்தும் அதிகாரமும் இருக்கும். நீங்கள் எதையும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகச் சொல்லிவிடக் கூடியவர் ஆனால் உண்மை பேசுபவர்/ நீங்கள்கஷ்டங்களை அனுபவிப்பீர்கள் உங்கள் வாழ்க்கையில், 22 வது வயதில்தான், உங்களுக்கு பிரமாதமானநல்ல அதிருஷ்டம் ஏற்படும்.
25.பூரட்டாதி
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், பணம் சம்பாதிப்பதில் வெற்றி காண்பீர்கள் அதிகமாகப்பேசக்கூடிய நீங்கள், நன்கு படித்தவர் தேர்ச்சிபெற்றவர். நண்பர்களுடன் உங்களுக்கு நல்ல உறவுகள்இருந்து வரும். நீங்கள் தெளிவாகப் பேசுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை, பெரும்பாலும் ஒருபணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவராக இருப்பார். நீங்கள், வெகு எளிதில், எதிர்பாலைச்சேர்ந்தவர்களால் ஈக்கப்படுகிறீர்கள். குழந்தைகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள். உங்களுக்கு, நல்ல, உடல்கட்டு இருக்கும் உங்கள் வாழ்க்கையில் 19 வது மற்றும் 21 வது வயதில்தான் மிகவும்அதிருஷ்டமான காலத்தை எட்டுவீர்கள்.
26.உத்ரட்டாதி
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், ஒரு சிறந்த மேடைப் பேச்சாளராகவும், மகிழ்ச்சிநிறைந்தவராகவும், நற்குணமும், எதிரிகளை ஒடுக்கி வெற்றி கொள்ளும் திறனும் மிக்கவராகவும்விளங்குவீர்கள். நீங்கள், தாராள சிந்தையுடையவராகவும், செல்வவளமும், அறிவாற்றலும்நிறைந்தவராகவும் இருப்பீர்கள். உங்களுக்கு கவர்ச்சிகரமான, வசீகர உடற்கட்டு இருக்கும். உங்களுக்குகுழந்தைகளும் பேரக் குழந்தைகளும் இருப்பார்கள். உங்கள் வாழ்க்கையில், 27, 31 ஆம் வயதில்தான், நல்ல அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள்.
27.ரேவதி
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நல்ல சுபாவம் உடையவராகவும், பணக்காரராகவும், நன்னம்பிக்கையும், அறிவாற்றலும் படைத்தவராகவும், நியாயமான வழிகளில் பணம்சம்பாதிப்பவராகவும் நீங்கள் விளங்குவீர்கள். நீங்கள், வயதில் பெரியவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்பணிந்து நடப்பதுடன், மரியாதையும் அளிக்கிறீர்கள். நீங்கள் இந்த குந்த் முல நகூஷத்திரத்தில்பிறந்தவராதலால், பூஜை செய்திடவேண்டும். உங்கள் 17, 21, மற்றும் 24 ஆம் வயதை எட்டும்போது,நல்ல அதிருஷ்டத்தைப் பாக்கலாம்.