Wednesday 18 April 2012

மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை

 
 
 
 
 

மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை







  • டாக்டர் 12 மணிக்கு நீங்க சாப்பிட சொன்ன மாத்திரையை 6 ம ணிக்கே சாப்பிட்டு விட்டேன். அப்புறம் என்னாச்சு?
    கடிகாரத்தை 12 மணிக்கு திருப்பி வைச்சிட்டேன்.





  • டாக்டர் நேத்து நீங்க கொடுத்த டியூப் மாத்திரை பெரிசா இருந்தது ஆனாலும் கஷ்ட்டப்பட்டு எப்படியோ முழுங்கிட்டேன் அடப்பாவி டிகிரி பார்க்க வச்சிருந்த தர்மா மீட்டரை தூக்கிட்டு போய் முழுங்கிட்டயா?





  • என்னது காய்ச்சலுக்குன்னு போன உனக்கு ஆப்ரேஷன் நடந்துச்சா, கொடுமையா இருக்கே? அவங்க தர்மா மீட்டரை முழுங்கிட்டேன், அதான்.





  • நோயாளி டாக்டர் என் காதுக்குள் பல்லி போயிருச்சி சார்? டாக்டர் ஏம்பா காதுல பல்லி போகிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தாய்?
    நோயாளி எற்கனவே கரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னு பார்த்தேன்.





  • ஆப்ரேஷன் எப்ப டாக்டர்? கனவுதானே வருது...! அதனாலேன்ன?
    இல்லை டாக்டர் இடைஇடையே இந்த கனவை உங்களுக்கு வழங்குப வர்களுன்னு விளம்பரம்வேற வருதே.





  • மருந்து குடித்தவுடன் ஒருவர் எகிறி எகிறி குதிக்கிறாறே ஏன்? டாக்டர் மருந்தை சாப்பிடும் முன் நன்கு குலுக்கி விட்டு சாப்பிட சொன்னாராம். ஆனால் அவர் மருந்தை குலுக்காமல் அப்படியே சாப்பிட்டு விட்டாராம். அதான்.





  • டாக்டர் இந்த நர்ஸை மாத்திடுங்க ஏங்க அப்படி சொல்றீங்க? ஆபத்தான பேஷண்ட், இவரை நல்லா கவனின்னு சொல்லிட்டு போனீங்க. இந்தம்மா விடிய விடிய என் பக்கத்துல உட்கார்ந்து உத்துப் பார்த்துட்டே இருக்கு. எனக்கு பயமா இருக்கு.





  • எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க? ஆன்னு வாயைத் திறக்க சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு, அதான்.





  • ஒரு சைடு மூக்ல மட்டும் பொடி போடுறீங்களே ஏன்? மூக்குப் பொடி போடறதை டாக்டர் பாதியா குறைச்சுக்க சொ ன்னாருங்க அதான்.





  • இருமல், இருமல்னு டாக்டரிடம் போனியே, டாக்டர் என்ன சொன் னார்? இது இருமல் தான்னு அவரும் ஒப்புக்கிட்டார்.





  • என்ன டாக்டர் எனக்கு மூணு தடவை ஆப்ரேஷன் பண்ணிட்டீங்களா? யோய் மூணு தடவை மயக்க மருந்து கொடுத்தேன் கொடுத்த 5 நிமிஷத்துல எந்திரிச்சுகிட்டு இதே கேள்வியை கேட்டுக்கிட்டிருக்கே.





  • இந்த டாக்டர் ரொம் மோசம். என் மனைவியை பார்க்கவந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிவிட்டார்? நீங்களாவது பரவாயில்லை, நான் போஸ்ட் மேன் போஸ்ட் டெலிவரி கொடுக்க வந்த என்னை பெட்டில் அட்மிட்ட பண்ணிவிட்டார்.





  • அந்த டாக்டர் பேலின்னு கண்டுபிடிச்சிட்டியா, எப்படி? கால்ல வெடிப்புப இருக்குதுன்னே உள்ளே போனவர் கம் பாட்டிலை எடுத்துட்டு வந்து ஒட்டமுயற்சிக்கறாரு.





  • டாக்டர் நீங்க இன்னிக்கு ஆப்ரேஷன் பண்ண இருந்த பேஷண்ட் தப்பி ச்சு ஓடிட்டார். சரி பரவாயில்லை விடுங்க பிழைச்சு போகட்டும்.





  • இன்னிக்கு எங்களுக்கு ஆப்ரேஷன் போங்க டாக்டர் இன்னிக்தான் நர்ஸ் சிரிச்சு, சிரிச்சு பேசினாங்க. இப்படி சொல்லி என்னை கஷ்டப் படுத்திறீங்க.





  • டாக்டர் என் பையன் கை சூப்புகிறான். ஏதாவது வைத்தியம் செய்ய முடியுமா? கவலைப்படாதீங்க பையன் வளர்ந்தால் சரியாகிவிடும்.
    பையன் சூப்புவது என் கையாச்சே டாக்டர்.





  • வயிறு எரியுது டாக்டர் எப்போதிலிருந்து?
    உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்.
    வயிறு எரியுது டாக்டர்
    எப்போதிலிருந்து?
    உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்த்ததிலிருந்து டாக்டர்.





  • இரும்பிக்கிட்டே இருக்கிற அவன் ஏன் டாக்டர் போட்டாவை பார்த்துகிட்டே இருக்கான் அவங்க அம்மா இருமல் வந்தா டாக்டரை பார்க்க சொன்னாங்களாம்.





  • என்னங்க! அவர் வாசல்ல ரோமியோபதி டாக்டர்னு போர்டு போட்டிருக்கார்! ஆமாங்க. அந்த டாக்டர் பயங்கர ஜொள்ளுப் பார்ட்டி!





  • காலியான கேஸ் சிலிண்டரை எடுத்துக் கெண்டு டாக்டரை பார்க்க போகிறார் ஏன்? கேஸ் பிராப்ளம் வந்தால் டாக்டர் தன்னை வந்து பார்க்க சொன்னாராம்.





  • என்ன டாக்டர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட் நெத்தியில கத்தியால ஒரு கோடு போடுறாரு...? அது பிள்ளையார் சுழியாம்....





  • டாக்டர் நான் செத்து போய்விடுவேனா டாக்டர், இல்லை...! இல்லை...! நான் வைத்தியம் பண்ணினவங்கள்ள பத்துக் கு ஒன்பது பேர்தான் சாவாங்க...! நீங்கபொழச்சிப்பீங்க.





  • அவர் ஏன் கண்னை கட்டி கொண்டு இனிப்பு சாப்பிடுகிறார். டாக்டர் இனிப்பை கண்ணால் கூட பார்க்கக்கூடாதுன்னு சொல்லி விட்டாராம்.





  • டாக்டர். கொஞ்ச நாளா என் கணவருக்கு தூக்கத்துல பேசற வியாதி இருக்கு... பகல்ல பேசறதுக்கு கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா சரியாய் போயிடும்.





  • நர்ஸ் - டாக்டர் வெளிய ஒரு பேஷண்ட், மாத்திரை பெரிசா இரு க்குது எப்படி விழுங்கிறதுன்னு கேட்கிறார்? டாக்டர் - நான் காணேமன்னு தேடிக்கிட்டு இருக்கேன் முதல்ல பேப்பர் வெயிட்டை வாங்கிட்டு வா....





  • கொடுத்த பணத்தை தரலைன்னா பல்லை புடுங்கிடுவேன்னு சொல்லிட்டு போறாறே யார் அவர்? எங்க ஏரியா பல் டாக்டர்...!





  • டாக்டர் என்னை பத்து நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு நல்லா தூங்கணுமே... ஆபீஸ்க்கு லீவு போடறிங்களா?
    ம்ஹும் ஆபிஸ்க்கு லீவு போடாம போயிடுவேன்.





  • ஆப்ரேஷன் தியேட்டருக்குள்ள போகும்போது எதுக்கு டாக்டர் நி றைய புத்தகம் எடுத்துக்கிட்டு போறாரு? புத்தகம் படிச்சு படிச்சு ஆப்ரேஷன் பண்ணுவாரு.





  • ஆஹா, நான் பிழைச்சுட்டேன் ஆப்ரேஷன் சக்ஸஸ். யோவ் கத்தாத இது எமலோகம்.





  • வீட்டுக்கு போனா மறந்தாப்புல தூங்கிடுறேன் டாக்டர். இதிலொன்னும் தப்பில்லையே
    திருடப் போன வீட்டுல தூங்கிட்டா நான் மாட்டிக்குவேனே டாக்டர்...!





  • ஆஸ்பத்திரிக்கு என் மனைவியை கூட்டிட்டு போகும் போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு அப்ப டோர் டெலிவரின்னு சொல்லு...!





  • டாக்டர் இந்த ஆப்ரேஷன்ல நான் பிழைச்சிடுவேனா? அது தெரியாது, ஆனா கடன் தொல்லையில் இருந்து நான் பிழைச்சிடுவேன்.





  • உங்களுக்கு எப்பயிலேர்ந்து தலைவலி அதிகமா இருக்கு? உங்க பீஸ் பில்லை பார்த்ததிலிருந்து டாக்டர்.





  • டாக்டர் நோயாளியிடம் மருந்து கொடுத்தார். நோயாளி டாக்டரிடம் டானிக் எந்த அளவு சாப்பிடனும் என்றார். டாக்டர் 1 மூடி, 2 வேளை சாப்பிடனும் என்றார். மறுநாள் நோயாளி டாக்டரிடம் ஒருவேளை சாப்பிட்ட பின் எவ்வளவு டானிக் சாப்பிடனும் என்றார். டாக்டர் அதே 1 மூடி என்றார்.
    அதற்கு நோயாளி அந்த மூடியை நேற்றே சாப்பிட்டேன். இன்று சாப்பிட மூடி இல்லையே சார் என்றார்.





  • டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்? அப்படியா? சும்மாவா இருந்தீங்க..
    இல்ல டாக்டர் இருமிக்கிட்டே தான் இருந்தேன்.





  • ஒருவரை வாய் பொத்தி டாக்டரிடம் அழைத்துவந்தார்கள். டாக்டர் - என்ன ஆச்சி? ஏன் அவர் வாயை அடைத்து கொண்டு வரு கிறீர்கள்?
    வந்தவர் - சார் இவர் வாயை திறந்தால் வாத்து மாதிரி கத்துவ ரர். அதனால்தான் வாயை பொத்தினோம்.
    டாக்டர் - எத்தனை நாளா இப்படி இருக்கு?
    வந்தவர் - 2 வருடமா?
    டாக்டர் - அட ஏன் இவ்வளவு நாளா இவரு வாத்து முட்டை போட் டுகிட்டு இருந்தாரு 2 நாளா முட்டை போடவில்லை அதான் உங்களி டம் அழைத்து வந்துள்ளோம்.
    டாக்கடர் - !!!!





  • டாக்டர் நீங்க ஆபேரஷன் பண்ணினதுல இருந்து எனக்கு ஒரே தும்மலா வருது. அடடா...! என்னோட பொடி டப்பா உங்க வயிலுத்துல தான் இருக்கா?





  • ஒரு பருவப்பெண்னின் தகப்பனார் ஒரு டாக்டர். அவர் மகளிடம் அவசரம் அவசரமாக பேசினார். அந்த ஸ்டெதஸ் கோப் எடு, சூட்கேஸை எடு, எமர்ஜென்ஸி கால்ல யாரோ நான் உடனே வராவிட்டால் செத்துவிடுவேன் என்று சொல்லுகிறார்கள். பெண் நிதானமாக சொன்னாள் அப்பா அந்த போன் எனக்கு வந்தது.





  • டாக்டர் என் கணவர் தூக்கத்துல பேசுகிறார்? அப்பவாது அவர் பேசட்டும் விட்டுடுங்க...!





  • உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி? நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான்.





  • தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொல்றீங்க ஆனா என்னால் முடியாது டாக்டர் ஏன்?
    எங்க கோழி வெள்ளை முட்டைதான் போடும் டாக்டர்.





  • டாக்டர் என் வாழ்க்கை எப்படி போகுமொன்னு பயமா இருக்கு. ஒரு வருஷம் டிரீட்மெண்ட் தர்றேன் ஃபீஸ் ஆயிரம் ரூபாய். ஆயிரம் கொடுத்தா உங்க வாழ்க்கை சரியாகிவிடும் என் வாழ்க்கை.





  • ஸ்பூனை ஏன் இரண்டாக உடைச்சீங்க...! அரை ஸ்பூன் மருந்து மட்டும் டாக்டர் சாப்பிடச் சொன்னாரே





  • வயிறு எரியுது டாக்டர் எப்ப இருந்து?
    பல்பை முழுங்கினதுல இருந்து





  • நர்ஸ்! பேஷண்ட்டுக்கு சுகர் இருக்கா? இல்ல சார்.
    பீ.பி இருக்கா
    இல்லை சார்.
    அட, ஆச்சர்யமா இருக்கே!
    பேஷண்ட் செத்து அரை மணி ஆச்சு சார்!





  • டாக்டர் நீங்க கொடுத்த மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட் டேன் உருண்டையா இருந்த பெரியகண்ணாடி மாத்திரைதான் முழுங்க சிரமமா இருந்தது. அடப்பாவி பேப்பர் வெயிட்டை எடுத்துட்டு போனது நீதானா?





  • ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்! எது?
    நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடுறது!





  • உங்க வயித்துல நிறைய கேஸ் இருக்கு எத்தனை சிலிண்டர் ஆகும் டாக்டர்?





  • டாக்டர் என் மாமியார் கால்ல முள் குத்திடுச்சு முள்ளை எடுக்கணுமா?
    முள் சின்னது. அதையேன் தொந்தரவு பண்ணணும்? காலை எடுத்துடுங்க.





  • ஊசி குத்தினால் வலிக்காதுன்னு சொன்னீங்க இப்ப பயங்கரமா வலிக்குது டாக்டர்? எனக்குத்தான் வலிக்காதுன்னு சொன்னே.





  • இரண்டு இட்லியை கூட என்னால் முழுசா சாப்பிட முடியல டாக்டர் ...! என்னாலயும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது. புட்டு புட் டுதன் சாப்பிட முடியும்.





  • பகல் கனவு பலிக்குமா டாக்டர்...! பலிக்காது ஏன் கேட்கறீங்க...?
    நீங்க ஆபரேசன் செஞ்சு, நான் பிழைக்கிற மாதிரி கனவு கண்டேன்.





  • தம்பி உடையான் படைக்கு அஞ்சன். ஏன்? என்ன தம்பி ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்.





  • டாக்டர் தொழிலை விட்டுடலாம்னு பார்க்கிறேன். ஏன் பேஷண்ட் யாரும் வர்றதில்லையா?
    இல்ல பேஷண்ட் யாரும் பிழைக்க மாட்டேங்கிறாங்கள்.





  • ஹலோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா? உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாது.
    பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...!





  • நீங்க அதிர்ஷ்டசாலி டாக்டர் எப்படி சொல்றீங்க?
    உங்களுக்கு ஏதாவது ஆப்ரேஷனா, நீங்க பண்ணிக்க வேண்டியதில்லை பாருங்க.





  • நோயாளி - 10 வருடமா எனக்கு ஞாபகமறதி இருக்கு டாக்டர் டாக்டர் - ஏன் இவ்வளவு நாட்களாக தாமதாமக வருகிறீர்கள்.
    நோயாளி - மறந்து போச்சு டாக்டர்.





  • உங்களுக்கு அல்சராமே? அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீங்க?





  • இன்னிக்கு நம்ம டாக்டர் நாலு உயிர்களை காப்பாத்திட்டார்...! அப்படியா ...! எப்படி...!
    இன்னிக்கு நடக்க இருந்த 4 ஆபரேஷனையும் தள்ளி வச்சிட்டார்...!

    No comments: