Friday 25 May 2012

குஜராத் நரேந்திர மோடியின் அசரவைக்கும் நீர் மேலாண்மை


குஜராத் நரேந்திர மோடியின் அசரவைக்கும் நீர் மேலாண்மை

குஜராத்தில் விவசாயத்திற்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம், கால்நடை பராமரிப்புக்கும் வழங்கப்பட்டு வருகிறது. குஜராத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் குறைவு. எனவே இறைச்சி வியாபாரம் அங்கு பெரியளவில் இல்லை. ஆனால், பால் வளம் அமோகம். பெரும்பான்மையான பால் - வெண்ணெய், நெய், பால் பவுடர், ஐஸ்கிரீம், சீஸ் என்று மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றப்பட்டு, இந்திய
சந்தையில் சக்கை போடு போடுகின்றன. (அமுல் - குஜராத் நிறுவனம் என்பதை மறந்து விடாதீர்கள்).

10 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்திற்கு எப்படி தண்ணீர் பற்றி கவலைப் பட்டார்களோ, அதே அளவு கால்நடைகளுக்கான தண்ணீர் குறித்தும் குஜராத் வாசிகள் கவலைப் பட்டார்கள். குஜராத் அரசும் அதை மனதில் வைத்தே செயல்பட்டது.

முன்பு தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தங்கள் கால்நடைகளுடன் இடம் பெயரும் அவலம் இருந்து வந்தது. 2001- ஆம் ஆண்டு வரை ரயில்கள் மூலம் குடிநீரை மாநிலத்தின் பல பாகங்களுக்கும் எடுத்துச் சென்றனர். சுமார் 4,000 கிராமங்களுக்கு லாரிகள் மூலமாகவே தண்ணீர் சப்ளை நடைபெற்றது.இதுபோக, குடிநீர் கோளாறுகளால் மக்களை நோய் தாக்கும் அவலமும் இருந்து வந்தது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நீர் ஆதாரங்கள் அனைத்தும் முன்னேற்றப்பட்டன. கிராம அளவில் நீரைப் பாதுகாக்கும், சுத்தப்படுத்தும் பணிகள் முடுக்கப்பட்டன. இன்று குஜராத் முழுக்க குடிநீருக்கான பைப்புகள் பொருத்தப்பட்டு, கடைக்கோடி கிராமத்தில் கூட வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. குறிப்பாக பழங்குடியினர் பகுதியிலும் 100 சதவிகித குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. 4 ஆயிரம் கிராமங்களுக்கு டேங்கர் லாரிகள் போன நிலைமை மாறி, இன்றைக்கு வெறும் 114 கிராமங்களுக்கு மட்டுமே லாரிகள் மூலம் குடிநீர் அனுப்பப்படுகிறது."அடுத்த முறை நீங்கள் வந்தால், அந்த 114 கிராமங்களும் கூட பைப்புகள் மூலம் இணைக்கப்பட்டுவிட்டன என்ற தகவலைப் பெறலாம்" என்றார் ஓர் அதிகாரி.

குஜராத்தில் சுமார் 200 ஆறுகள் உள்ளன. இதில் 17 ஆறுகள் வருடம் பூராவும் தண்ணீர் ஓடக் கூடிய ஆறுகள். 27 நதிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு ஆற்று நீர் கொஞ்சம் கூட கடலுக்குப் போகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. நர்மதா ஆறு குஜராத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரம். ஆனால், அந்த ஆறு குஜராத்தின் தென்கிழக்கு எல்லையில் ஒரு ஓரமாய் ஒதுங்கி விட்டது. ஆனால், மோடியின் அரசு அசந்து போகவில்லை. மிகப் பெரிய கால்வாய்களை வெட்டி, 8 அடி விட்டம் கொண்ட பிரமாண்ட பைப்புகள் மூலம் அந்தத் தண்ணீரை குஜராத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று, பஞ்சத்தையும் வறட்சியையும் ஓட ஓட விரட்டியிருக்கிறது. 156 சுத்திகரிப்பு நிலையங்கள், 11 ஆயிரம் பம்ப்பிங் ஸ்டேஷன்கள், 1 லட்சத்து 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு விநியோக குழாய்கள் மூலம், 75 சதவிகித மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு உத்திரவாதம் தந்துள்ளது குஜராத் அரசு. அதே நேரம் குடிநீருக்காக 2000-ல் பயன்படுத்தப்பட்ட 1,146 ஆழ்துளை கிணறுகள், 2011-ல் 207 ஆக குறைக்கப்பட்டுள்ளன. அந்தளவுக்கு சமவெளி நீரை அதிகரித்து, நிலத்தடி நீரை பாதுகாக்கிறது குஜராத்.

அரசு குடிநீர் கொடுக்கிறது என்பது மட்டுமில்லை; அதை முழுமையான தரத்துடன் கொடுக்கிறது என்பதுதான் குஜராத்தின் கூடுதல் சிறப்பு. தொடர்ந்து ஒவ்வொரு கட்டங்களிலும் இடைவிடாது தர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய அரசு சொல்லும் குடிநீர் தரத்தை விட, சிறந்த தரத்தில் குடிநீரை வழங்கிக் கொண்டிருக்கிறது குஜராத் அரசு.

எந்த முயற்சியையும் அரசாங்கம் தனியே செய்வதில்லை என்பதுதான் குஜராத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நான் கருதுகிறேன். எந்தத் திட்டம் போட்டாலும் அந்தத் திட்டம் குறித்து கிராம மக்களுக்கு விளக்கி, அவர்களுக்குக் கிடைக்கப் போகும் அனுகூலங்களை விவரித்து, அதை அவர்கள் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி விடுகிறது குஜராத் அரசு. 'இது ஏதோ அரசு பணத்தில், அரசு நிறைவேற்றும் திட்டம் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படாமல், இது நமது பணத்தில், நமக்காக நடக்கும் திட்டம்; இதை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்குத்தான் உள்ளது' என்ற எண்ணம் அங்குள்ள மக்களுக்கு ஏற்படுகிறது. இதுதான் குஜராத் வெற்றியின் ரகசியம் என்று தோன்றுகிறது. "Users are the best managers" என்பதுதான் குடிநீர் விஷயத்தில் குஜராத்தின் தாரக மந்திரம்.

கோடிக்கணக்கில் அரசு செலவு செய்து தரமான குடிநீரை ஒதுங்கிப் போன கிராமங்களில் கூட, வீட்டுக்கு வீடு வழங்கும் குஜராத் அரசு, அதில் ஒரு சொட்டு நீரைக் கூட இலவசமாகக் கொடுப்பது கிடையாது. பயன்படுத்தும் அளவைப் பொறுத்து மாதம் 10 ரூபாய் முதல் 70 ரூபாய் மாதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 'தினசரி ஒரு ரூபாய்' என்ற திட்டம்தான் குஜராத் முழுக்க பாப்புலர்.

இதைவிட அற்புதமான விஷயம் இந்த நீர் விநியோகத்தை நவீன மயமாக்கி வைத்திருப்பதுதான். எலெக்ட்ரானிக் சிஸ்டத்தில் தண்ணீர் சப்ளை நடக்கிறது. தனி நபருக்கு குளிக்க, சமைக்க என தினசரி 70 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் 100 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அந்த கிராமத்தை குறிப்பிட்டு, 7,000 லிட்டர் தண்ணீர் என்று பட்டனை அமுக்கினால், அந்த கிராமத்தில் உள்ள டேங்கில் 7,000 லிட்டர் தண்ணீர் மட்டும் உடனே நிரப்பப்பட்டு, வால்வு தானாக மூடிக் கொள்கிறது. அந்த 7,000 லிட்டர் தண்ணீரை கிராம சபை ஒவ்வொரு வீட்டுக்கும் இத்தனை லிட்டர் என்று பட்டன் மூலமே சப்ளை செய்து விடுகிறது.

'வீட்டில் விசேஷம், உறவினர் வருகிறார்கள்; இன்றைக்கு 100 லிட்டர் தண்ணீர் கூடுதலாய் வேண்டும்' என்று கோரி, நாம் கிராம சபையில் உரிய பணத்தைக் கட்டினால், அன்றைக்கு மட்டும் நம் வீட்டு குழாயில் 100 லிட்டர் தண்ணீர் கூடுதலாய் கொட்டும். கேட்கவும், பார்க்கவும் ஆச்சரியமாய் இருந்தது. ஓவர் டேங்க் நிரம்பின பிறகு வால்வு தானாய் மூடிக் கொண்டாலும், கிராம அலுவலர்களுக்கு 'டேங்க் நிரம்பி விட்டது' என தானாகவே எஸ்.எம்.எஸ். வேறு வருகிறது.

"நீர் மேலாண்மையில் குஜராத் நம்பர்-ஒன் மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலமாவது குடிநீருக்கென்று 2,745 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கிப் பார்த்திருக்கிறீர்களா? இங்கு ஒதுக்கியுள்ளோம். இந்தியாவின் மழை நீர் சேகரிப்பு 17 சதவிகிதம். ஆனால், குஜராத்தில் மழைநீர் சேகரிப்பை 72 சதவிகிதத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். இன்றைக்கு போதுமான தண்ணீர் இருந்தாலும், எங்கள் அரசு இதோடு திருப்தியடைந்து விடவில்லை. அடுத்த 20 வருடங்களை மனதில் வைத்து இப்போதும் கூட 3,200 கோடி ரூபாய் செலவில் மேலும், மேலும் பைப் லைன்கள் பதித்து வருகிறோம்" என்று கூறிய குடிநீர் விநியோகத் துறையின் முதன்மைச் செயலாளர் ஹெச்.கே.தாஸ் ஐ.ஏ.எஸ்., மேலும் முதல்வர் நரேந்திர மோடி பற்றி விவரித்தார்.
"பெரிதாக சிந்தி; காலத்தை நிர்ணயம் செய்; நிதி ஒதுக்கு; ஈடுபாட்டோடு உழை; வெற்றியை உனதாக்கு" - இதுதான் குஜராத் திட்டங்களுக்கான ஆதார மந்திரம்.
இந்த வரிசையில்தான் எல்லா துறைகளிலும் குஜராத் வெற்றியை ஈட்டி வருகிறது. டெட்லைன் நிர்ணயிப்பதில் முதல்வர் நரேந்திர மோடி மிகுந்த கவனம் காட்டுவார். 'அதற்காக நிதி கூடுதல் ஆனால் கவலைப்பட வேண்டாம்' என்பார். ஒரு ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டால், அதை அந்த ஆட்சிக் காலத்திலேயே முடித்து விட வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டுவார். சொன்ன காலத்தில் முடிப்பதில்தான் வெற்றி இருக்கிறது என்பது அவர் எண்ணம். அப்படித்தான் செக் டேம்கள், வாட்டர் பைப்புகள் எல்லாம் துரித வேகத்தில் நடந்தன. "குடிநீர் மேலாண்மைக்காக 2008-ல் பிரதமரிடம் விருது; 2009-ல் ஐக்கிய நாடுகள் சபை விருது; 2010-ல் காமன்வெல்த் விருது என்று ஒவ்வொரு ஆண்டும் ஒரு விருதைப் பெற்று வருகிறோம்" என்று குறிப்பிட்டார் தாஸ்.

நாம் இங்கு ஒரு லிட்டர் மினரல் வாட்டரை 15 ரூபாய்க்கு வாங்கிக் குடிக்கிறோம். வீடுகளுக்கு 25 லிட்டர் தண்ணீர் கேன்களை 30 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். குஜராத்திலும் மினரல் வாட்டர் கிடைக்கிறது. லிட்டர் 20 பைசாதான். அரசாங்கமே கொடுக்கிறது. அதுவும் கிராமப்புறத்தில்! 

இளமையாக இருக்க



இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்...






எப்போதும்  இளமையாக  இருக்க  உணவு  விஷயத்தில் உக்களுக்கு  உதவும்  21  குறிப்புகள்  இங்கே ......

  • தினசரி  ஒரு  கைப்பிடியளவுக்கு  பாதாம் பருப்பு,  வேர்க்கடலை  போன்ற  கொட்டை   வகைகளைச்  சாப்பிடுங்கள்.  இதை  சாப்பிட்டால்  இதய நோய்  அபாயம்  வெகுவாக  குறையும்.   ஆயுளில்  3   ஆண்டுகளை  அதிகரிக்கும்  என்கிறார்கள்  அமெரிக்க  ஆராய்ச்சியாளர்கள்,  இதயத்துக்கு  ஆரோக்கியமளிக்கும்   நல்ல  கொழுப்பு,  ஒட்டுமொத்த   நலனை  காக்கும்  'செலினியம்'  ஆகியவை  கொட்டை வகை  உணவுகளின்  சொத்து.
  • உங்கள்  உணவில்  வாரத்தில்  2   முறை  மீன்  இருக்கட்டும்.  இரண்டில்  ஒன்று  எண்ணெய்  மீனாக  இருந்தால்  நல்லது.  கொலஸ்ட்ராலை  குறைத்து,  இருதய  நோய்  அபாயத்தைக்  கட்டுப்படுத்தக்கூடிய  'ஒமேகா  3  பேட்டி  ஆசிட்',   எண்ணை  செறிந்த  மீன்களில்  அதிகம்  உள்ளது.
  • சாப்பாடுகளுக்கு இடையே  3   மணிநேர  இடைவெளி  அவசியம்.  மூன்று  பிரதான  உணவுகளில்  காலை  உணவை  முழுமையாக  சாப்பிடுங்கள்.
  • தினசரி  4   கப்  காபி  பருகலாம்.  ஆரோக்கியம்  காக்கிறேன்  பேர்வழியென்று  காபியையே  துறக்க  வேண்டாம்.  அளவாக  காப்பி  பருகுவது  என்பது  சர்க்கரை  நோய்,  உணவுக்குழாய்  கேன்சர்,  ஈரல்  நோயிகளைத்  தடுக்கும்  என்பது  ஆய்வாளர்களின்  கருத்து.
  • தினந்தோறும்  5   வகை  பழங்கள்,  காய்கறிகள்  சாப்பிடுவது  ஆரோக்கிய  வாழ்வுக்கு  அடித்தளமிடும்.  பழங்கள்,  காய்கறிகளில்  உள்ள   'ஆண்டி ஆக்ஸிடன்ட்கள்'   கேன்சர்,  இருதய   நோயிகளைத்  தடுக்கும், நோயித் தொற்றுக்கு  எதிராக   இருக்கும்.  முன்றுக்கு  இரண்டு  என்ற  விகிதத்தில்  காய்கறி,  பழங்கள்  எடுத்துக்  கொள்ளலாம்.  காய்கறிகள் அதிகமான  நார்ச்சத்தையும்,  குறைவான சர்க்கரை  சத்தையும்  கொண்டுள்ளன.
  • வயதுக்கு  வந்தவர்கள்  தினமும்  6   கிராமுக்கு  மேல்  உப்பு  சேர்க்க  வேண்டாம்.  சமையல்  செய்யும்போது  மட்டும்  உப்பு  சேர்க்கவேண்டும்.  பிரெட்,  பாக்கிங்  உணவு  வகைகளில்  அதிக  உப்பு  மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.
  • மொத்தம்  7   வகையான  நிறங்களை  கொண்ட  காய்கறிகள்,  பழங்கள்  இருக்கின்றன.  ஒவ்வொரு  வண்ண  காய்கறி,  பழங்களும்  வெவ்வேறு  வகையான  'ஆண்டி ஆக்ஸ்டன்ட்களை'  கொண்டிருக்கிறன.  எனவே  எல்லா  வண்ண  காய்கறி,  பழங்களும்  உங்கள் உணவில்  இருக்கட்டும். 
  • தினமும்  8  கப்  திரவம்  குடிப்பது   அவசியம்.  ஆனால் அது  எல்லாம்   தண்ணீராக  இருக்க  வேண்டும்  என்ற  அவசியமில்லை.   டீ,  காபியும்  இதில்  இடம்பெறலாம்.
  • சராசரியாக  பெண்கள்  9 வகை  மாவுசத்து  உணவுகளை  (ஆண்களுக்கு  11  வகை)  சாப்பிடவேண்டும்.  ஒரு  துண்டு ரொட்டி,  முட்டை  அளவு  உருளைக்  கிழங்கு,  28  கிராம்  சாதம்  போன்றவை  இதில்  அடங்கியிருக்கலாம்.
  • சாதரணமாக  குளிபானங்களில் 10  சதவீத  சர்க்கரை  உள்ளது.  அதாவது  ஒரு   புட்டியில்  150  கலோரி  இருக்கிறது.  தொடர்ந்து   குளிர்பானம்  பருகுவது   தொப்பைக்கு  ஒரு  முக்கிய  காரணம். 'டயட் '   குளிர்பானங்களுக்கு  மாறலாம்.  ஜூஸுடன்  அதிக தண்ணீர்  சேர்த்துப்   பருகலாம்.
  • காலை  உணவும்,  மதிய  உணவும்  11  மணியை  தாண்ட வேண்டாம்.  அதிகப்  பசியின்  போது  நீங்கள்  அதிகமாக   சாப்பிடுவீர்கள்.
  • பொதுவாக   பெண்கள்  உணவில்  12   மில்லி   கிராம்     இரும்புச் சத்தை  எடுத்துக்கொள்கிறார்கள்.  இரும்புச்சத்து  செறிந்த  உணவுகளை  உங்கள்  உணவில் தினசரி  சேர்த்துக்  கொள்ளுங்கள்.
  • சாதாரணமாக   நாம்  நம்  ஒவ்வொரு  கிலோ  எடைக்கும்  26   கலோரி   உணவு  சாப்பிடலாம்.
  • பனை அல்லது தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் சுத்தமான பதநீர், கள் போன்றவற்றை  தினமும் ஒரு கோப்பை அருந்தலாம். 
  • நீங்கள்  ஒருமுறை  உணவை  விழுங்கும்போது  15  முறை  மெல்ல  வேண்டும். நாம்  சராசரியாக  7   முறைதான் உணவை  மேல்கிறோம்.
  • அங்களுக்கு  தினசரி  16   சதவீதபுரதம்  அவசியம்.  அதாவது  55  கிராம். பெண்களுக்கு  என்றால்  45  கிராம்.
  • நாம்  அனைத்து  விதமான சத்துக்களையும்  பெற,  ஒவ்வொரு  3  நாட்களுக்கும்  17   வகையான உணவு வகைகளை  உண்ண  வேண்டும் என்கின்றனர்  உணவியல்  நிபுணர்கள்.
  • அனைவருக்கும்  தினசரி  18   கிராம் நார்சத்து  தேவை.  அதற்கு தானியங்கள்,  பழங்கள்,  காய்கறிகள்  ஆகிறவை  நல்ல  ஆதாரங்கள்.
  • மொத்தம்  19   வகையான  தாது  உப்புகள்,  வைட்டமின்கள்  அனைவருக்கும்   அவசியத்  தேவை  என்பது  மருத்துவர்களின்  கருத்து.
  • உங்கள்  தினசரி  உணவில்,  கொழுப்பு  20  கிராம்களுக்கு  அதிகமாக இருக்கக்கூடாது.  உங்கள்  தினசரி  கலோரிகளில்   35   சதவீதத்துக்குள்   தான்  கொழுப்பின்   பங்கு  இருக்க  வேண்டும்.
  • பால்  சார்ந்த  உணவு  வகைகளில்  21,  ஒவ்வொரு  வாரமும்  உங்கள்  உணவுப்  பட்டியலில்  இருப்பது  கட்டாயம்.  தினசரி  மூன்று  வகையான  பால்சார்ந்த  உணவுப்  பொருட்களை  சாப்பிடுங்கள்.
இப்படிக்கு... 

Friday 18 May 2012

தகவல் அறியும் சட்டம்


தகவல் அறியும் சட்டம் 2005 இன் கீழ் தகவல் அறிய வேண்டுகோள்



  1. எந்த பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தேவைப்படும் தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். (அரசு நிறுவனம்/அரசு உதவிபெறும் நிறுவனம்)
  2. விண்ணப்பம் கைகளால் எழுதப்படலாம் அல்லது தட்டச்சு செய்யப்படலாம்.India Development Gateway Portal என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  3. விண்ணப்பங்கள் ஆங்கிலம், இந்தி அல்லது எந்த மாநில மொழியிலாவது சமர்ப்பிக்கலாம்
  4. பின்வரும் தகவல்களோடு மனுவை தரவேண்டும்.
    1. மனுவைப் பெற்றுக்கொண்ட துணை பொதுதகவல் அதிகாரி (APIO) அல்லது பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர்.
    2. பொருள்: தகவல் அறியும் சட்டம் பகுதி 6(1) இன் படி மேல் முறையீட்டுக்கான விண்ணப்பம்.
    3. பொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து எதிர்பார்க்கும் தகவல்கள்.
    4. விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர்
    5. பிரிவு SC, ST & OBC
    6. விண்ணப்பக் கட்டணம்.
    7. வறுமைக்கோட்டிற்கு கீழ் நீங்கள் (BPL) வசிப்பவரா? ஆம்/இல்லை
    8. கைபேசி எண் (mobile no) மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் (இரண்டும் கட்டாயமில்லை) அஞ்சல் முகவரி.
    9. தேதி மற்றும் இடம்.
    10. மனுதாரரின் இடம்.
    11. மனுதாரரின் கையொப்பம்
    12. இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் பட்டியல்..
  5. மனு செய்வதற்குமுன் துணை பொதுதகவல் அதிகாரி/பொதுத்தகவல் அதிகாரியின் பெயர், கூறப்பட்டுள்ள கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய முறை ஆகியனவற்றைச் சரிபார்த்துக்கொள்ளவும்.
  6. தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் அறியும் மனுவினுக்கான கட்டணம் இருந்த போதிலும், தாழ்த்தப்பட்டவர்கள், மலைஜாதியினர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பவர்கள் ஆகியோருக்கு மனுவினைப்பெற கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
  7. கட்டண விலக்கு வேண்டுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், மலை சாதியினர் மற்றும் வறுமை கோட்டின் கீழ் வசிப்பவர்கள் என்பதற்கான சான்றிதழைச் சமர்ப்பிக்கவேண்டும்.
  8. மனுக்களை நேரிலோ அல்லது அஞ்சலிலோ சமர்ப்பிக்கலாம். அஞ்சலில் அனுப்புவதாக இருப்பின் பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும். கூரியர் மூலம் (courier) அனுப்புவதை அறவே தவிர்க்க வேண்டும்.
  9. விண்ணப்பம்/மனுவினை இரண்டு நகல் எடுக்கவும். (அதாவது, மனு, பணம் கட்டியதற்கான ரசீது, நேரில் அல்லது அஞ்சலில் மனு அனுப்பப்பட்டதற்கான ஆதாரம் ஆகியன) அவைகளை பின்னாள் ஒப்பிடுதலுக்காக (future reference) பத்திரமாக வைத்திருக்கவும்.
  10. நேரில் உங்களது மனுவை சமர்ப்பித்திருந்தால் அலுவலகத்தில் தேதியும் முத்திரையும் கூடிய ரசீதைப்பெற்று மிகக் கவனமாக வைத்திருக்கவும்.
  11. கேட்ட தகவலைத் தரவேண்டிய காலம், பொதுத் தகவல் தொடர்பு அதிகாரி மனுவை பெற்றுக் கொண்ட நாளிலிருந்து தொடங்குகிறது.
பின் வருவனவற்றையும் கவனத்தில் கொள்க

வ. எண்

சூழல்
தகவலைத் தரவேண்டிய கால அவகாச எல்லை
1சாதாரணமாக தகவலைத் தெரிவிக்க30 நாள்
2கேட்கப்படும் தகவல் ஒரு மனிதனின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைக் குறித்ததாக இருப்பின்48 மணி நேரம்
3துணை பொதுதகவல் அதிகாரி(APIO) மனுவைப் பெற்றிருந்தால்மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு சூழல்களுக்கான கால அவகாசத்துடன் மேலும் 5 நாள் சேர்த்துக்கொள்ளப்படும் (30 நாள்+5 நாள்)/48 மணி நேரம் + 5 நாள்)

Wednesday 9 May 2012

சினிமா

வழக்கு எண் 18/9



சென்னை, மே 5 (டிஎன்எஸ்) பணம் என்னவெல்லாம் செய்யும், அந்த பணம் இல்லாத அப்பாவி கீழ் தட்டு மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதையும், பள்ளி மாணவர்களுக்கு அவர்களது பெற்றொர்கள் கொடுக்கும் பணமும், செல்லமும் அவர்களை எப்படிப்பட விபரீத செயலில் ஈடுபட வைக்கிறது என்பதையும் சுத்தியலில் அடித்தாற்போல் ரொம்பவே அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இப்படம் சினிமா ரசிகர்களுக்கு வெறும் படமாக மட்டும் இன்றி ஒரு பாடமாகவும், அதே சமயம் பெற்றொர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் அமைந்திருக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண் மீது ஒருவன் ஆசிட் வீசிவிட, குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் விசாரணையை ஆரம்பிக்கிறது. யார் மீதாவாது சந்தேகம் இருக்கிறதா என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவிடம் கேட்க, அவர் தனது பெண்ணை ஒரு தலையாக காதலித்த தெரு வண்டிக்கடை உணவகத்தில் வேலை செய்யும் ஸ்ரீயை கைகாட்டுகிறார். ஸ்ரீயை அழைத்து போலீஸ் தனது விசாரனையை ஆரம்பிக்க, வாழ்க்கையில் ஒருவன் எந்த எந்த துண்பத்தையெல்லாம் அனுபவிக்க கூடாதோ, அப்படிபட்ட துன்பங்களையெல்லாம் அனுபவித்து, இறுதியில் சென்னை வண்டிகடை உணவகத்தில் வேலை செய்யும் ஸ்ரீயின் கதையை கேட்டு போலீஸே அனுதாபப்படுகிறது.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் வேலைப் பார்த்த வீட்டு உரிமையாளரின் பெண்ணான பள்ளி மாணவி ஸ்ரீ யை விசாரித்த போலீஸிடம் "சார் இந்த பையனை விசாரித்தது போல மற்றொருவனையும் விசாரிக்கணும்" என்று சொல்கிறார். ஏன் அவனை விசாரிக்க வேண்டும் என்று போலீசாரின் கேள்விக்கு அந்த மாணவி தனது கதையை விவரிக்க ஆரம்பித்ததும் தொடர்கிறது மற்றொரு பகுதி. இந்த இரண்டு பகுதிகளையும் இணைத்து மிக நேர்த்த்தியான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் பணம் படைத்த மேல்தட்டு வர்க்கத்தினால் கீழ்தட்டு மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருப்பதுதான் க்ளைமாக்ஸ்.

இரண்டு கதைகளாக நகரும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக திரைக்கதை அமைந்திருக்கிறது. பத்திரிகைகளில் சாதரணாம படித்து விட்டு செல்லும் செய்திக்குப் பின்னால் எவ்வளவு பெரிய கதை இருக்கும் என்பதை மிக ஆழமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் நடித்த புதுமுகங்கள் அனைவருமே நடிப்பில் தங்களது திறமையை அபாரமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வண்டிகடை உணவகத்தில் வேலை செய்யும் வேலு கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீயின் தோற்றமும், அவருடைய நடிப்பும் அந்த கதாபாத்திரதை படம் முடிந்தும் நம் கண்ணை விட்ட அகலாமல் பார்த்துக்கொள்கிறது. வீட்டு வேலை செய்யும் ஜோதி கதாபாத்திரத்தில் நடித்த ஊர்மிளா மகந்தாவுக்கு வசனங்கள் இல்லை என்றாலும் அவருடைய கண்களே பெரும் அளவுக்கு நடித்திருக்கிறது. அதேபோல பள்ளி மாணவனாகவும், மாணவியாகவும் நடித்த நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தது போல நடித்திருக்கிறார்கள்.

போலீஸாக நடித்த குமாரவேலு அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். பள்ளி மாணவர்களை பிடித்து கண்டிப்பது, ஜோதியின் முகத்தில் ஆசிட் அடித்தவனை கண்டுபிடிப்பது என ரசிகர்களின் மனதில் நல்ல போலீஸாக இடம்பிடிக்கும் குமாரவேலு, இறுதியில் கெட்ட போலீசாக இடம்பிடிக்கிறார். சின்னசாமி கதாபாத்திரத்தில் நடித்த சிவனும் நம்மை கவனிக்க வைக்கிறான்.

உருத்தாத எந்தவித ஒளியையும் பயன்படுத்தாமல் அற்புதமான ஓளிப்பதிவை கொடுத்திருக்கிறார் விஜய் மில்டன். ஸ்டில் கேமராவில் படமாக்கப்பட்ட படமாம் இது. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அமைதியான, அழகான மெட்டுக்களைப் போட்டிருக்கும் அறிமுக இசையமைப்பாளர் பிரசன்னா, பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு ரசிகர்களுக்கு எந்த வித குழப்பத்தையும் ஏற்படுத்தாமல், இரண்டு பகுதிகளாக நகரும் காட்சிகளை துள்ளியமாக வெட்டியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கும் இப்படம், தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆண்டுகள் பேசப்படும் படமாக அமையும். அந்த அளவுக்கு ரசிகர்களின் அடிமனதில் பதியும் அளவுக்கு இப்படத்தை செதுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

குடுபத்தோடு பார்க்க வேண்டிய இப்படம் வழக்காக இல்லாமல் ரசிக்களுக்கு ஒரு பாடமாகவும் அமையும்.

Wednesday 2 May 2012

செருப்பு வாங்கலையோ! செருப்பு !!!


funny.


footwear designs 01 Strange Footwear designs
footwear designs 02 Strange Footwear designs
footwear designs 03 Strange Footwear designs
footwear designs 04 Strange Footwear designs
footwear designs 05 Strange Footwear designs
footwear designs 06 Strange Footwear designs
footwear designs 07 Strange Footwear designs
footwear designs 08 Strange Footwear designs
footwear designs 09 Strange Footwear designs
footwear designs 10 Strange Footwear designs
footwear designs 11 Strange Footwear designs
footwear designs 12 Strange Footwear designs
footwear designs 13 Strange Footwear designs
footwear designs 14 Strange Footwear designs
footwear designs 15 Strange Footwear designs
footwear designs 16 Strange Footwear designs
footwear designs 17 Strange Footwear designs
footwear designs 18 Strange Footwear designs
footwear designs 19 Strange Footwear designs
footwear designs 20 Strange Footwear designs
footwear designs 21 Strange Footwear designs
footwear designs 22 Strange Footwear designs
footwear designs 23 Strange Footwear designs
footwear designs 24 Strange Footwear designs
footwear designs 25 Strange Footwear designs
footwear designs 26 Strange Footwear designs
footwear designs 27 Strange Footwear designs
footwear designs 28 500x470 Strange Footwear designs
footwear designs 29 Strange Footwear designs
footwear designs 30 500x567 Strange Footwear designs
footwear designs 31 500x440 Strange Footwear designs
footwear designs 32 500x440 Strange Footwear designs
footwear designs 33 500x357 Strange Footwear designs
footwear designs 34 500x376 Strange Footwear designs
footwear designs 35 500x447 Strange Footwear designs
footwear designs 36 500x567 Strange Footwear designs
footwear designs 37 500x322 Strange Footwear designs
footwear designs 38 500x322 Strange Footwear designs
footwear designs 39 500x376 Strange Footwear designs
footwear designs 40 500x322 Strange Footwear designs
 

பூலோக தேவதைகள்


Baby Photography;

baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
The following images brilliant examples of how the perspective and angle you choose can give you truly memorable photographs. Some parents go their entire life without ever taking a photo of their baby. A special moment is lost before you know it, so preserve those precious early years of your child’s life.
Asian Influence Newborn | Nelms Photographic Artistry
Asian influence newborn baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
My Favorite Baby | YAYforPOPCORN
my favorite baby by YAYforPOPCORN baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Baby Ian | Stacy PHOTOgraphy
Baby Ian toddler photography Baby Photography: 40 Photos of Lovable Babies |
Eco Baby | Ec.gc.ca
Eco Baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Unique Baby Gift | Wallpaper S
Unique Baby Gift photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Baby | SecondArt
Baby photography by SecondArt Baby Photography: 40 Photos of Lovable Babies
Miracles | Karen Pfeiffer
Miracles black and white baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Heads Up Kaleigh | Karenlynn Hunter
Heads Up Kaleigh baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Big Brother, Little Sister | Bitsy Baby Photography [Rita]
Big Brother Little Sister Baby Photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Six Months | Carrie F.
Six Months baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Athens, Ga Baby | Andie Freeman
Athens, Ga Baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Flower baby | Anne Geddes
flower baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
R2fullreg | PDXerin Erin Tole
R2fullreg baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Baby Ashton | Jovijovijovi
Baby Ashton photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Baby on a Basket | Holger Urbanek
Baby on a Basket photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Blooming Flowers | Ane Geddes
Cute baby with blooming flowers photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Adopt a Baby | cofcc.org
Adopt a baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Seven Months | Carrie F.
Seven Months baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Baby Blues | Heidi Hope
Baby blues photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Caitlyn V | Carl Hall
Caitlyn V Baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Bed Of Roses | Anne Geddes
Bed Of Roses Baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Baby Levi   newborn in hands photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Pineapple | Megvagy
Pineapple Baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Cute Dolls | M19
cute dolls baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Baby in Arms | Paul.lloyd17
Baby in Arms photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Girly girl | Heidi Hope
girly girl baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
baby like flowers by anne geddes baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Friends | Platingham
Friends baby Photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Rubber Ducky | Sonia Mason
Rubber Ducky baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Wrapped Up | Heidi Hope
wrapped up baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
the special bed baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Athens, Ga Newborn | Andie Freeman
Athens, Ga Newborn baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Cool Baby | Wallpaperseek
ws Cool Baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Sleepy When Wet | Amifobornot
funny baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Guitar Baby | Kvaga
Guitar Baby by Kvaga photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Baby Mermaid | Lolosad
mermaid sweet baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Look Up | M19
Look Up Baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Baby Swim | Eythor
Baby photography swimming Baby Photography: 40 Photos of Lovable Babies
You gonna be a Star | Jane-art
You gonna be a Star by jane art baby photography Baby Photography: 40 Photos of Lovable Babies
Angels | Anne Geddes
Angels Baby Photography Baby Photography: 40 Photos of Lovable Babies