Thursday 19 April 2012

பாரதியார் கவிதைகள்




 பாரதியார் கவிதைகள்.













             பாப்பாப் பாட்டு

ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா. 1

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா. 2

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா. 3

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா. 4

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா. 5


காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா. 6

பொய்சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா. 7

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா. 8

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா. 9

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா. 10

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா. 11

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா. 12

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா. 13

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா. 14

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர். 15

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா. 16 


  புதிய ஆத்திசூடி

காப்பு

பரம்பொருள் வாழ்த்து

ஆத்திசூடி இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணா¢ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
நூல்

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவ துயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்

ஓய்த லொழி
ஒளடதங் குறை
கற்ற தொழுகு
காலம் அழியேல்
கிளைபல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்துநில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலுந் துணிந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்துநில்
கோல்கைக் கொண்டு வாழ்
கவ்வியதை விடேல்
சரித்திரத் தோ¢ச்சி கொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
சீறுவோர்ச் சீறு
சுமையினுக்கு இளைத்திடேல்
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சோ¢க்கை அழியேலுல்
சைகையிற் பொருளுணா¢
சொல்வது தெளிந்து சொல்
சோதிடந் தனையிகழ்
சௌ£¤யந் தவறேல்
ஞமலிபோல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிரென இன்புறு
ஞெகிழ்வது அருளின்
ஞேயங் காத்தல்செய்
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்றுவாழ்
தீயோர்க்கு அஞ்சேல்

துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்றுணர்
தேசத்தைக் காத்தல் செய்
தையலை உயா¢வு செய்
தொன்மைக்கு அஞ்சேல்
தோல்வியிற் கலங்கேல்
தவத்தினை நிதம்
நன்று கருது
நாளெலாம் வினைசெய்
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணா¢
நெற்றி சுருக்கிடேல்
நோ¢படப் பேசு
நையப் புடை
நொந்தது சாகும்
நோற்பது கைவிடேல்
பணத்தினைப் பெருக்கு
பாட்டினில் அன்புசெய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்குஇடங்கொடேல்
புதியன விரும்பு
பூமி இழந்திடேல்
பெரிதினும் பெரிதுகேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்ம்மை இகழ்
போர்த்தொழில் பழகு
மந்திரம் வலிமை

மானம் போற்று
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணா¢ந்து கொள்
முனையிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங்கொ டேல்
மெல்லத் தெரிந்து சொல்
மேழி போற்று
மொய்ம்புறத் தவஞ்சொய்
மோனம் போற்று
மௌட்டியந் தனைக்கொல்
யவனா¢போல் முயற்சி கொள்
யாவரையும் மதித்து வாழ்
யௌவனம் காத்தல் செய்
ரஸத்திலே தோ¢ச்சி கொள்
ராஜஸம் பயில்
நீதி தவறேல்
ருசிபல வென்றுணா¢
ரூபஸ் செம்மைசெய்
ரேகையில் கனிகொள்
ரோதனம் தவிர்
ரௌத்திரம் பழகு
லவம் பல வெள்ளமாம்
லாகவம் பயிற்சிசெய்
லீலை இவ் வுலகு
(உ)லுத்தரை இகழ்
(உ) லோக நூல் கற்றுணா¢
லௌகிகம் ஆற்று
வருவதை மகிழ்ந்துண்
வானநூற் பயிற்சிகொள்
விதையினைத் தொ¤ந்திடு
வீ£¤யம் பெருக்கு
வெடிப்புறப் பேசு
வேதம் புதுமைசெய்
வையத் தலைமைகொள்
வெளவுதல் நீக்கு


 அழகுத் தெய்வம்

மங்கியற்தோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன். 1

யோகந்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன்;
யோகமே தவம் தவமே யோக மென உரைத்தாள்.
‘ஏகமோ பொருளன்றி இரண்டாமோ’ என்றேன்;
‘இரண்டுமாம், ஒன்றுமாம், யாவுமாம்’ என்றாள்.
‘தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?’ என்றேன்
‘வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்.
விருப்புடனே பெய்குவது வேறாமோ?’ என்றாள்.                             2

‘காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?’ என்றேன்
‘காலமே மதியினுக்கோர் கருவியாம்’ என்றாள்.
‘ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?’ என்றேன்;
‘நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்?’ என்றாள்
‘ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?’ என்றேன்.
‘எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்’ என்றாள்.
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ?’ என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.  



  புதிய ஆத்திசூடி

காப்பு

பரம்பொருள் வாழ்த்து

ஆத்திசூடி இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக்
கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்வோம்.

நூல்
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்

ஊண்மிக விரும்பு
எண்ணுவ துயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்

ஓய்த லொழி
ஒளடதங் குறை
கற்ற தொழுகு
காலம் அழியேல்
கிளை
பல தாங்கேல்

கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலுந் துணிந்து நில்

கத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்துநில்
கோல்கைக் கொண்டு வாழ்
கவ்வியதை விடேல்
சரித்திரத் தோ¢ச்சி கொள்

சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
சீறுவோர்ச் சீறு
சுமையினுக்கு இளத்திடேல்
சூரரைப் போற்று

செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேலுல்
கைகையிற் பொருளுணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிடந் தனையிகழ்

சௌரியந் தவறேல்
ஞமலிபோல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிரென இன்புறு
ஞெகிழ்வது அருளின்

ஞேயங் காத்தல்செய்
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்றுவாழ்
தீயோ£¢க்கு அஞ்சேல்

துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்றுணர்
தேசத்தைக் காத்தல் செய்
தையலை உயர்வு செய்

தொன்மைக்கு அஞ்சேல்¢
தோல்வியிற் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி
நன்று கருது
நாளெலாம் வினைசெய்

நினைப்படு முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்

நேர்படப் பேசு
நையப் புடை
நொந்தது சாகும்
நோற்பது கைவிடேல்
பணத்தினைப் பெருக்கு

பாட்டினில் அன்புசெய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு
பூமி இழந்திடேல்

பெரிதினும் பெரிதுகேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்ம்ம இகழ்
போர்த்தொழில் பழகு
மந்திரம் வலிமை

மானம் போற்று
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்து கொள்
முனயிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங்கொ டேல்

மெல்லத் தெரிந்து சொல்
மேழி போற்று
மொய்ம்புறத் தவஞ்சொய்
மோனம் போற்று
மௌட்டியந் தனக்கொல்

யவனர்போல் முயற்சி கொள்
யாவரையும் மதித்து வாழ்
யௌவனம் காத்தல் செய்
ரஸத்திலே தோ¢ச்சி கொள்
ராஜஸம் பயில்

ரீதி தவறேல்
ருசிபல வென்றுணர்
ரூபஸ் செம்மைசெய்
ரேகையில் கனிகொள்
ரோதனம் தவிர்

ரௌத்திரம் பழகு
லவம் பல வெள்ளமாம்
லாகவம் பயிற்சிசெய்
லீலை இவ் வுலகு
(உ)லுத்தரை இகழ்

(உ) லோக நூல் கற்றுணர்
லௌகிகம் ஆற்று
வருவதை மகிழ்ந்துண்
வானநூற் பயிற்சிகொள்
விதையினைத் தெரிந்திடு

வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு
வேதம் புதுமைசெய்
வையத் தலைமைகொள்
வெளவுதல் நீக்கு.

கண்ணம்மா என் காதலி - 1
                       (காட்சி வியப்பு)
செஞ்சுருட்டி - ஏகதாளம் ரஸங்கள் : சிருங்காரம், அற்புதம்

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்க ளடீ!                                     1

சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.                  2

சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ! - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று!                       3


 கண்ணம்மா என் காதலி - 2
       (பின்னே வந்து நின்று கண் மறைத்தல்)

நாதநாமக்கிரியை - ஆதிதாளம் ; சிருங்கார ரஸம்

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
          வானையும் கடலினையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
          முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
          நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற்கனவில்
          தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். 1

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
          ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுத் தீண்டி யறிந்தேன்,
          பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்,
ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்;
          ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
"வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
          மாய மெவரிடத்தில்?" என்று மொழிந்தேன். 2

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
          திருமித் தழுவி "என்ன செய்தி சொல்" என்றேன்;
"நெரித்த திரைகடலில் என்ன கண்டிட்டாய்?
          நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
          சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
          பெற்ற நலங்கள் என்ன? பேசுதி" என்றாள். 3

"நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
          நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
          சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,
          பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினிலுள் கைவி லக்கியே,
          திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்". 4
  கண்ணம்மா என் காதலி - 3
                      (முகத்திரை களைதல்)

நாதநாமக்கிரியை - ஆதிதாளம் ; சிருங்கார ரஸம்

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்
       திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த
       மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும் - துணி
       மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்
       சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ? 1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய் - பண்டை
       ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்
       ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார்? - வலு
       வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ப சப்பிலே - கனி
        கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பேனோ? 2
கண்ணம்மா என் காதலி - 4
                      (நாணிக் கண் புதைத்தல்)

நாதநாமக்கிரியை - ஆதிதாளம் ; சிருங்கார ரஸம்

மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை - இவன்
        மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ? - இங்கு
        செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ?
வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன் - நின்றன்
        மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? - எனக்
        கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா! 1

கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? - கன்னங்
        கன்றிச் சிவக்கமுத்த மிட்ட தில்லையோ!
அன்னிய மாகநம்முள் எண்ணுவதில்லை - இரண்
        டாவியுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? - துகில்
        பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வனோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? - கண்கள்
        இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ? 2

நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் - சுவை
        நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் - தம்முள்
        பன்னி உபசரணை பேசுவ துண்டோ?
நீட்டுங் கதிர்களோடு நிலவு வந்தே - விண்ணை
        நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகினைச் சோதி கவ்வுங்கால் - அவை
        முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? 3

சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திட்டேன்; - அவர்
        சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ! - மிக
        நெடும்பண்டைக் காலமுதல் சேர்ந்து வந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை, - அங்கு
        பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;
ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோ ன் - கண்ணன்
        உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்கு நான். 4

முன்னை மிகப் பழமை இரணியனாம் - எந்தை
        மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன் - ஒளிப்
        பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்;
சொன்னவர் சாத்திரத்தில்மி கவல்லர் காண்; - அவர்
        சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; - இதில்
        ஏதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே? 5
கண்ணம்மா என் காதலி - 5
                      (குறிப்பிடம் தவறியது)

செஞ்சுருட்டி - ஆதிதாளம் ; சிருங்கார ரஸம்

தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
       செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
       பாங்கியோ டென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
       மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
       பாவை தெரியு தடீ! 1

மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே
       வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா
       வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! - இந்த வையகம்
       மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
       நரகத் துழலுவதோ? 2

கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும்
       காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான்
       அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும்
       கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள் - எதற் காகவோ
       நாணிக் குலைந்திடுவாள். 3

கூடிப் பிரியாமலே - ஓரி ராவெலாம்
       கொஞ்சிக் குலவி யங்கே,
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை
       ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்
       நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்
       பண்ணிய தில்லை யடி! 4


 கண்ணம்மா என் காதலி - 6
                      யோகம்

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2

வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா! 3

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5

காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6

நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! 7

தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! 8 




பாரதியார் பாடல்கள்

             பகைவனுக் கருள்வாய்

பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே
பகைவனுக் கருள்வாய்.

புகைநடுவினில் தீயிருப்பதைப்
      பூமியிற் கண்டோமே - நன்னெஞ்சே
      பூமியிற் கண்டோமே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
      பரமன் வாழ்கின்றான் நன்னெஞ்சே
      பரமன் வாழ்கின்றான்.                                                          (பகைவனுக்)               1

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
      செய்தி யறியாயோ - நன்னெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
      கொடி வளராதோ? - நன்னெஞ்சே                                   (பகைவனுக்)               2

உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
      உள்ளம் நிறைவாமோ? - நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
      சேர்த்தபின் தேனாமோ? - நன்னெஞ்சே                        (பகைவனுக்)               3

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
      வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழி வானென்
      சாத்திரங் கேளாயோ? - நன்னெஞ்சே                             (பகைவனுக்)               4

போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
      போலுவந் தானுமவன் - நன்னெஞ்சே
நேருக் கருச்சுனன் தோிற் கசைகொண்டு
      நின்றதுங் கண்ண னன்றோ? - நன்னெஞ்சே               (பகைவனுக்)               5

தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
      சிந்தையிற் போற்றிடுவாய் - நன்னெஞ்சே
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
      அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே                        (பகைவனுக்)               6







பாரதியார் பாடல்கள்

             விடுதலை
         [ராகம்-நாட்டை]

பல்லவி
வேண்டுமடி எப்போதும் விடுதலை, அம்மா!

சரணங்கள்
தூண்டு மின்ப வாடைவீசு துய்யதேன் கடல்
சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழராகி எம்மோ டமுதமுண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ (வேண்டுமடி) 1


விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே
விண்ணு மண்ணும் வந்துபணிய மேன்மை துன்றியே
பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்ம்மை தீர, மெய்ம்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி) 2

பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமைகொண்டு பற்றி நிற்கவே,
நண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ண மினிய தேவ மகளிர் மருவ நாமும் உவகைதுள்ள (வேண்டுமடி) 3



                தமிழ் மொழி வாழ்த்து
          

Bharathi


தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே.

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
வாழிய செந்தமிழ்
          

                         ஆசிரியப்பா

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
தாயின் மணிக்கொடி பாரீர்!

             (பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்.
              தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு)

 
பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர் -- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

சரணங்கள்

1. ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
           உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
           பட்டொளி வீசிப் பறந்தது பாரீர் (தாயின்)

2. பட்டுத் துகிலென லாமோ? -அதில்
           பாய்ந்து சுழற்றும் பெரும் புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
           மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப படலம் (தாயின்)

3. இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
           எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் – அதன்
           மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)

4. கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
           காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர்அவ்வீரர்; - தங்கள்
           நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார் (தாயின்)

5. அணியணி யாயவர் நிற்கும் - இந்த
           ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறல்
           பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர் (தாயின்)

6. செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
           தீக்கண் மறவர்கள், சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
           சேவடிக் கேபணி செய்திடு துளுவர்

7. கன்னடர் ஒட்டியரோடு - போரில்
           காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்
பொன்னகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
           பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர்

8. பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
           போர் விறல் யாவும் மறப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் -பாரில்
           மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்.

9. பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
           பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன் னாட்டார்
துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத்
           தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும்

10. சேர்ந்ததைக் காப்பது காணீர் - அவர்
           சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
           தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)
 வந்தே மாதரம்
  தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு
(ராகம் - நாதநாமக்கிரியை)            [தாளம் - ஆதி]

             பல்லவி

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

              சரணங்கள்

ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
      ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஓன்றே- அன்றி
      வேறு குலத்தின ராயினும் ஒன்றே. (வந்தே)


ஈனப் பறையர்க ளேனும்- அவர்
     எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ- பிற
      தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)


ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில்
      அன்னியர் வந்து புகல் என்ன நீதி? -- ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்- தம்முள்
      சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)


ஒன்று பட்டால் உண்டு வாழ்வே- நம்மில்
      ஒற்றுமை நீங்கில் அ‎னைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்- இந்த
      ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)


எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்
      யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்படு கோடியும் வாழ்வோம்- வீழில்
      முப்பது கோடி முழுமையும் வீழ்வோம். (வந்தே)


புல்லடி மைத்தொழில் பேணிப்- பண்டு
      போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர-- இந்தத்
      தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)

 நாட்டு வணக்கம்
  [ராகம் - காம்போதி]            [தாளம் - ஆதி]

எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி
      இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
      முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
      சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
      வாயுற வாழ்த்தேனோ? - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
      என்று வணங்கேனோ? (1)

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
      ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
      அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
      களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
      போந்ததும் இந்நாடே - இதை
‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’
     என்று வணங்கேனோ? (2)

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
      வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
      தழுவிய திந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
      சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
      ஆர்ந்ததும் இந்நாடே - இதை
‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’
      என்று வணங்கேனோ? (3)

ச்சமில்லை! அச்சமில்லை!

  [பண்டாரப் பாட்டு]

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதித்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே.
இச்சகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 1

கச்சணிந்த கொங்க மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 2
 

                 சங்கு

  செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
       சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர் அவர் சொலுஞ் சாத்திரம்
       பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்.         1

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
       இப்பொழு தேமுத்தி சேர்ந்திடநாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
       தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்.         2

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு
       புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்திருப் பாரவர்
       ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்.         3

மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
       மண்ணெனக் கொண்டு மயக்கற்றிருந்தாரே
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
        சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம்.        4
   நந்தலாலா

[ ராகம் -- யகுல காம்போதி ] [ தாளம் -- ஆதி ]

காக்கச் சிறகினிலே
நந்தலாலா -- நின்றன்
கரியநிறந் தோன்றுதயே
நந்தலாலா;                        1

பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
பச்சைநிறந் தோன்றுதயே
நந்தலாலா;                        2


கேட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா;                        3

தீக்குள் விரலவத்தால்
நந்தலாலா -- நின்னத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா.                        4


  ஒளியும் இருளும்

வானமெங்கும் பரிதியின் சோதி;
        மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
        தரையின் மீதும் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
        கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்றன் உளத்தினில் மட்டும்
        வந்து நிற்கும் இருளிது வென்னே!         1

சோதி என்னும் கரையற்ற வெள்ளம்,
        தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதி என்னும் பெருங்கடல், சோதிச்
        சூறை, மாசறு சோதி யனந்தம்,
சோதி என்னும் நிறவிஃ துலகச்
        சூழ்ந்து நிற்ப, ஒருதனி நெஞ்சம்
சோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
        குமைந்து சோரும் கொடுமையி தென்னே.         2

தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
        சேர்ந்து புள்ளினம் வாழ்த்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
        காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாம யங்கிநல் லின்புறுஞ் சோதி,
        தரணி முற்றும் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
        சிறிய நெஞ்சந் தியங்குவ தென்னே!         3

நீர்ச் சுனைக்கணம் மின்னுற் றிலக,
        நெடிய குன்றம் நகைத்தொழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்,
        கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரங் கற்றும்
        தெவிட்டொ ணாதநல் லின்பக் கருவாம்
வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்டும்
         மெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே!         4

ட்டுக்குருவியைப் போலே


விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.

சரணங்கள்

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு) 1


பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையி லாததொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு) 2

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு) 3



 பாரத நாடு
  [ராகம் - ஹிந்துஸ்தானி]

        பல்லவி

பாருக்குள்ளே நல்ல நாடு -- எங்கள்
பாரத நாடு.

        சரணங்கள்

ஞானத்தி லேபர மோனத்தி லே -- உயர்
      மானத்திலே அன்ன தானத்திலே,
      கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 1

தீரத்தி லேபடை வீரத்திலே -- நெஞ்சில்
      ஈரத்தி லேஉப காரத்திலே,
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
      தருவதி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 2

நன்மையி லேஉடல் வன்மையிலே -- செல்வப்
      பன்மையி லேமறத் தன்மையிலே,
பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்
      புகழினி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 3

ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே -- புய
      வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே,
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
      கடலினி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 4

வண்மையி லேஉளத் திண்மையிலே -- மனத்
      தண்மையி லேமதி நுண்மையிலே,
உண்மையி லேதவ றாத புலவர்
      உணர்வினி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 5

யாகத்தி லேதவ வேகத்திலே -- தனி
      யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
      அருளினி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 6

ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்
      காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
      இனத்தினி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 7

தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே -- கனி
      ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நிதியின்
      சிறப்பினி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 8



No comments: